‘ஐ அம் கேம்’ படத்​துக்கு 156 நாட்கள் படப்​பிடிப்பு

0
15

துல்​கர் சல்​மான் கதா​நாயக​னாக நடிக்​கும் ‘ஐ அம் கேம்’ படத்​தில் ஆண்டனி வர்கீஸ், இயக்​குநர் மிஷ்கின், கதிர், கயாது லோஹர், பார்த் திவாரி, சம்​யுக்தா விஸ்​வ​நாதன் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். துல்​கரின் 40-வது படமான இந்த த்ரில்​லர் படத்தை ‘ஆர்​டிஎக்​ஸ்’ படத்தை இயக்​கிய நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்​ளார்.

துல்​கர் சல்​மான் தனது வேஃபரர் பிலிம்ஸ் சார்​பில் தயாரிக்கும் இப்​படம் மலை​யாளம், தமிழ், தெலுங்கு மொழிகளி​லும் வெளி​யாக இருக்​கிறது. இதன் படப்​பிடிப்பு இப்போது நிறைவடைந்​துள்​ளது. “இப்படம் சுமார் 11 மாதங்களில் மொத்​தம் 156 நாட்​கள் படமாக்​கப்​பட்​டுள்​ளது. தென்​னிந்​தி​யா​வின் 100-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் படப்​பிடிப்பு நடை​பெற்​றுள்​ளது. இந்த பெரிய பட்​ஜெட் திரைப்​படம், ஆகஸ்ட் மாதம் வெளி​யாக உள்​ளது” என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here