சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘குற்றம் கடிதல் 2’

0
104

பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, மாஸ்டர் விஜய், பாவெல் நவகீதன் உள்பட பலர் நடித்து 2014-ல் வெளியான திரைப்படம், ‘குற்றம் கடிதல்’. இந்தப் படத்தின் அடுத்த பாகம் இப்போது ‘குற்றம் கடிதல் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. ஜீவா இயக்கியுள்ளார்.

இதில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பாவல், பத்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சதிஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரித்து நடித்துள்ளார்.

‘குற்றம் கடிதல்’ படம் சமூக அவலம் பற்றிப் பேசியது. பள்ளிக்கூடப் பின்னணியில் சமூக த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது என்றது படக்குழு.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here