‘குட் பேட் அக்லி’ படத்தில் பழைய பாடல் ஒன்றை மீண்டும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. அஜித் நடித்துள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு பல்வேறு திரையரங்குகள் ஃபுல்லாகிவிட்டது. இப்படத்தில் இருந்து பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
இதில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ளார். இந்த...
மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய படம், ‘எம்புரான்’. மார்ச் 27-ல் இந்தப் படம் வெளியானது. இதில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றன. வில்லன் பெயரை 'பாபா பஜ்ரங்கி' என வைத்தனர். சில இடங்களில் வரும் வசனங்களும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, இந்தப் படத்தின் 3 நிமிட சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டன.
இந்நிலையில் இதன் தயாரிப்பாளர்களில்...
மதுவுக்கு எதிராக 'சரக்கு' என்ற படத்தை எடுத்த மன்சூர் அலிகான், அடுத்து நடித்து இசை அமைக்கும் படத்துக்கு ‘யார் அந்த சார்?’ என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தை எழுதி வேலு பிரபாகரன் இயக்குகிறார். அகரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். சலாம் சினிமாஸ் சார்பில் சபூர் தயாரிக்கிறார். “பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது, வேலியே பயிரை மேய்வது என்பது தான்...
புதுமுகங்கள் மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி,அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா நடிக்கும் படம், ‘நாங்கள்’. கலா பவ கிரியேஷன்ஸ் சார்பில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு வேத் ஷங்கர் சுகவனம் இசை அமைத்துள்ளார். இதை எழுதி இயக்கியுள்ள அவினாஷ் பிரகாஷ், படத்தின் ஒளிப்பதிவையும் எடிட்டிங்கையும் கையாண்டுள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது குழந்தைகள்...
விஷாலுக்கு நாயகியாக நடிக்க துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரவி அரசு படத்தில் நடித்து, தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிப்பதற்கு துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது.
‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு படங்களில் நடிக்க திட்டமிட்டார்...
பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வந்த சிவாங்கி தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியிருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் போட்டியாளராக பங்கெடுத்து பிரபலமாகி, பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்தார். அதில் மேலும் பிரபலமானார். பின்பு அதே நிகழ்ச்சியில் குக் ஆகவும் பங்கெடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இப்படி பல தளங்களில் பணிபுரிந்தவர், தற்போது சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியிருக்கிறார். ‘நானும் ரவுடி...
அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் விழாவொன்றில் கலந்து கொண்டார்.
அதில் தொகுப்பாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்....
தனுஷ் கால்ஷீட் பிரச்சினை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக ஆர்.கே.செல்வமணி மற்றும் கதிரேசன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தனுஷ் கால்ஷீட் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் கதிரேசன் புகார் ஒன்றை அளித்திருந்தார். ஆனால், ‘இட்லி கடை’ படம் தொடங்கப்பட்டபோது, இது தொடர்பான விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. தற்போது இதே தனுஷ் விவகாரம் தொடர்பாக பெப்சி தலைவர்...
சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட படம் ‘டென் ஹவர்ஸ்’. ஆனால், பல்வேறு படங்கள் வெளியீட்டால், இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது புதிய ட்ரெய்லருடன் ஏப்ரல் 18-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு.
தற்போது வெளியிட்டுள்ள 2-வது ட்ரெய்லருக்கு விஜய் சேதுபதி பின்னணிக் குரல்...
தென்னிந்திய தயாரிப்பாளர்களிடம் இருந்து பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் சன்னி தியோல் அறிவுரை
admin - 0
பிரபல இந்தி நடிகர் சன்னி தியோல். இவர் இப்போது ‘ஜாட்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதில் ரெஜினா காஸண்ட்ரா, ரன்தீப் ஹுடா, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைத் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். ‘புஷ்பா’வைத் தயாரித்த தெலுங்கு திரைப்பட நிறுவனமான மைத்ரிமூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
ஏப்.10-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில்...










