அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது.
அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அட்லீ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படத்தை வெளியிடவுள்ளது படக்குழு.
அட்லீ படத்துக்குப் பின் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிப்பார் அல்லு அர்ஜுன் என...
புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கட்ஸ்'. ஸ்ருதி நாராயணன், லேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்துள்ளார். ஓபிஆர்பி புரொடக் ஷன்ஸ்சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்துள்ளார். இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் நடிகரும் இயக்குநருமான ரங்கராஜ் பேசும்போது, “நடிகனாக வேண்டும் என்று...
ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் ராபர்ட் டி நிரோ. 80 வயதான இவர், ‘ரேஜிங் புல்’, 'தி காட்பாதர் பார்ட் 2’ படங்களுக்காக 2 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 'டாக்ஸி டிரைவர்', 'தி ஐரிஷ்மேன்', ‘த பிக் வெட்டிங்’, ‘ஜோக்கர்’ என பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் அளித்தபேட்டியில், தனக்கு சமீபத்தில் 7-வது குழந்தை பிறந்தது என்று அறிவித்திருந்தார். இந்நிலையில்,...
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சலீம் அக்தர் காலமானார். அவருக்கு வயது 82.
70 மற்றும் 80களில் ஏராளமான இந்திப் படங்களை தயாரித்தவர் சலீம் அக்தர். 1993ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ஃபூல் ஆர் அங்கார், 1995-ல் ஆமிர்கான் நடித்த ‘பாஸி’ உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். நடிகை ராணி முகர்ஜி இந்தியில் அறிமுகமான ‘ராஜா கி ஆயேகி பாரத்’ (1997) படத்தையும் தயாரித்துள்ளார்.
இது தவிர சோரோன் கி பராத் (1980),...
கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ (Odela Railway Station). தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அசோக் தேஜா இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஹெபா படேல், வசிஷ்ட என் சிம்ஹா,நாக மகேஷ், வம்சி, ஆகியோர் நடித்துள்ளனர்.. ‘காந்தாரா’ புகழ் அஜனேஷ் லோக்நாத் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். படம்...
நடிகர் விஜய் சேதுபதி அடுத்து, தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்தி நடிகை தபு, இதில் முக்கிய வேடத்தில்...
ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம் 1)’ கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி வெளியாகி வசூலை குவித்தது.
இதையடுத்து 8-ம் பாகம் வரும் மே-23...
அஜித்தின் உடல் எடை குறைப்பு ரகசியம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது: ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மிகவும் சீரியசான உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார் அஜித். அது மிகவும் அபாரமானது. எனக்கு தெரிந்து யாரும் அப்படி செய்யமுடியுமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒருநாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே எடுத்துக் கொள்வார். திடீரென...
இந்தி நடிகர் ஆமிர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய இந்திப் படம், 'லாபதா லேடீஸ் இதில் நிதான்ஷி கோயல், பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ், சாயா கதம், ரவி கிஷன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த வருடம் மார்ச் 1-ம் தேதி வெளியானது. புதுமணத் தம்பதிகள் ஒரே ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்கள். இரண்டு மணமகனும் ஒரே நிற கோட் சூட் அணிந்திருக்கிறார்கள். புதுமணப் பெண்களும்...
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள கணக்கு, பிப். 13-ம் தேதி முதல் முடக்கப்பட்டது. இது குறித்து கூறியிருந்த அவர், 'அதை மீட்க என்னால் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் இல்லை. அந்த கணக்கின் உள் நுழைய முடியாததால் நீக்கவும் இயலவில்லை. அந்த கணக்கில் இருந்து வரும் எந்த இணைப்பையும் தகவல்களையும் நம்ப வேண்டாம். கணக்கு மீட்கப்பட்டால் தெரிவிப்பேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் கணக்கு மீட்கப்பட்டு...










