குடும்பஸ்தனை நகைச்சுவையாக்கியது ஏன்? – இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி விளக்கம்

0
257

மணிகண்டன், ஷான்வே மேக்னா, இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ படம், ஜன.24-ல் வெளியானது. சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரித்த இந்தப் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். அவருடன் இணைந்து பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை அமைத்திருந்தார்.

இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, “குடும்பஸ்தன் படம் வெற்றி பெறும் என்று நினைத்தோம். இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. 10 வருடத்துக்கு முன் ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனலை ஆரம்பிக்கும் போதே சினிமா ஆசை இருந்தது. அதற்குக் கிடைத்த வரவேற்பு அந்த ஆசையை இன்னும் அதிகமாக்கியது. பிறகு இந்தப் பட வாய்ப்புக் கிடைத்தது.

எங்கள் டீமில் இருந்து ஒரு படம் உருவாகிறது என்றால் ரசிகர்கள், காமெடியைதான் எதிர்பார்ப்பார்கள் என்று நினைத்தோம். அதன்படி குடும்பஸ்தன் படத்தை காமெடியாக உருவாக்கினோம். படம் பார்த்துவிட்டுப் பல நடிகர்கள், இயக்குநர்கள் பாராட்டினார்கள். அடுத்தப் படத்துக்கான ஐடியா ரெடியாக இருக்கிறது. தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதுபற்றி அறிவிப்பு வரும்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here