நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது.
நடிகராகவும் இயக்குநராகவும் சசிகுமார் அறிமுகமான படம், ‘சுப்ரமணியபுரம்’. அவரே தயாரிக்கவும் செய்தார். கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஜெய், ஸ்வாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக நிலைத்து விட்டது....
என் குடும்பத்தினர் எனக்கு தரும் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் மனைவி ஷாலினி நிறைய தியாகங்களை செய்திருக்கிறார் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித், “பட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயருக்கு முன்னால் பட்டப் பெயர்கள் போடுவதை விட என்னை அஜித் அல்லது ஏகே என்றே அழைக்க விரும்புகிறேன். இதுவும் ஒரு தொழில் அவ்வளவுதான். நான் ஒரு நடிகன். என்னுடைய...
‘ரெட்ரோ’ படத்தின் தொடக்கத்தில் வரும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி தியேட்டரில் ஸ்பெஷல் தருணமாக இருக்கும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்....
‘தொட்டாங் சிணுங்கி’ இயக்குநர் கே.எஸ்.அதியமான் நீண்ட இடைவெளிக்குப் பிரகு மீண்டும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
‘தொட்டாங் சிணுங்கி’ படத்தின் மூலம் இயக்குநராக கொண்டாடப்பட்டவர் கே.எஸ்.அதியமான். அப்படத்துக்குப் பிறகு தமிழ், இந்தி படங்களை இயக்கினாலும் எதுவுமே பெரியளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்கினார். அப்படமும் பாதியிலேயே நிற்கிறது.
தற்போது புதிய படம் ஒன்றை சத்தமின்றி இயக்கி வருகிறார் அதியமான். சுரேஷ் காமாட்சி தயாரித்து...
சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
‘சகாப்தம்’ மற்றும் ‘மதுர வீரன்’ ஆகிய படங்களின் மூலம் நாயகனாக அறியப்பட்டவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது ‘படை தலைவன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி...
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகளை பேசும் ரீதியான கதைகளே வருகின்றன என்று இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்தார்.
அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ‘கன்னி’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. 90-களைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ’சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது, “ஒரு குறும்படம் என்கிற...
‘96 பார்ட் 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இதிலும் நடிக்கவுள்ளார்கள்.
தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்கு முதலில் பி.சி.ஸ்ரீராம் தான் ஒப்பந்தமாகி இருந்தார். பின்பு உடல்நிலை...
அடுத்ததாக புதுமுகங்கள் நடிக்க, காதல் பின்னணியில் படம் ஒன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன்.
‘தக் லைஃப்’ முடித்துவிட்டு அடுத்ததாக காதல் பின்னணியில்...
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டு வார வசூல் என்ன என்பதை படக்குழு அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் ‘குட் பேட் அக்லி’ நல்ல வசூல் செய்து வருகிறது. மேலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அவ்வப்போது வசூல் நிலவரத்தை அறிவித்து வருகிறார்கள். தற்போது 2 வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.172.3 கோடி வசூல் செய்திருப்பதாக தமிழக விநியோகஸ்தர் ராகுல் அவரது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகமாக்கி உள்ளது.
‘விஸ்வாசம்’...
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’ பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிளாசிகல் பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்...










