Google search engine
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. போயப்பத்தி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘அகண்டா 2’. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பாலகிருஷ்ணா. இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது. பாலகிருஷ்ணா – கோபிசந்த் மாலினேனி இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விருத்தி சினிமாஸ் நிறுவனம்...
’ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய காட்சிகளை கோவாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. இதில் ரஜினியுடன் கவுரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சின்ன கதாபாத்திரம் என்றாலும், நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் தனது விருப்பதினை தெரிவித்திருந்தார் விஜய் சேதுபதி. அதன் மூலம் இப்படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். ரஜினி – விஜய்...
‘தேவாரா 2’ படம் கைவிடப்பட்டது உறுதியாகி இருக்கிறது. இதனால் கொரட்டலா சிவாவின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் ‘தேவாரா’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், அப்படத்தின் கதை முடியாத காரணத்தினால் 2-ம் பாகம் உருவாக இருந்தது. ஆனால், படமோ எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. சமீபத்தில் ‘தேவாரா’ வெளியாகி ஓர் ஆண்டு ஆனதை முன்னிட்டு படக்குழுவினர் 2-ம்...
பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இந்த பிரச்சாரம் நவ.25 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. “பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் பிரச்சாரம், ஆன்லைன் வன்முறை, துஷ்பிரயோகம், தொழில்நுட்பம் மூலமாக ஏற்படும் மிரட்டல்கள் போன்றவற்றுக்கு எதிராகச் செயல்படுகிறது. இந்த முயற்சியில் இணைந்தது குறித்துப்...
ஒளிப்​ப​திவுக்​கான லென்ஸ் தேர்​வே, ஒரு காட்​சி​யின் மறைமொழி​யாக இருக்​கிறது. சினிமா என்​பது காட்​சிகளின் தொடர்ச்​சி, அது உணர்​வு​களின் தீவிர​மான பயணம். இந்​தப் பயணத்​தில் காட்​சி​யின் ஒவ்​வொரு தருணத்​தை​யும் மனநிலை​யை​யும், தொனியை​யும், பார்​வை​யாளர் எந்த உணர்​வுடன் பார்க்க வேண்​டும் என்​ப​தை​யும் தீர்​மானிப்​பவை கேமரா லென்​ஸ்​கள். ஒவ்​வொரு லென்​ஸும் கண்​ணுக்​குத் தெரி​யாத நுண்​ணிய மொழியைப் பேசுகிறது. அது காட்​சி​யின் ஆழத்​தை​யும், பரப்​பை​யும், அளவை​யும் வடிவ​மைக்​கும் மந்​திரம். லென்ஸ்களின் வகைகள்: அழகியலும் உணர்ச்​சி​யும் - ஸ்பெரிக்​கல் லென்​ஸ்​கள் இயல்​பான...
‘அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு பொறாமையும் ஒரு காரணம் என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்தார். சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன....
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தினை பெரும்...
அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்​தப் படத்​துக்​காக ‘குளோப் டிரோட்​டர்’ என்ற சாகச உலகத்​தைப் படக்​குழு உருவாக்​கி​யுள்​ளது. இதற்​கான விழாவை ஹைதரா​பாத்​தில் கடந்த நவ.15 அன்று ஏற்பாடு செய்தது படக்குழு. இந்த நிகழ்வில் படத்தின் தலைப்பையும் அது தொடர்பான அறிமுக டீசரையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிகழ்வில் பேசிய ராஜமவுலி...
தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காப்புரிமை கேட்பதில்லை. அது கேட்க ஆரம்பித்தால் எங்கோ போய் எங்கோ முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு நாள் மால் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறுவன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அந்த அப்பா அந்த சிறுவனிடம், ‘உனக்கு பிடித்த கரு கரு கருப்பாயி பாடல் இருக்கிறது...
சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கலை இயக்குநர் ( ஆர்ட் டைரக்டர் ) தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா...