Google search engine
மிஷ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு 2’ படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் உள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தற்போது ஆண்ட்ரியா பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ‘2025-ம் ஆண்டு வெளியீடு’ என்று அறிவித்துள்ளது. இது...
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம், ‘விடாமுயற்சி’. லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு ஞாயிற்றுக்கிழமை (டிச.22) அறிவித்துள்ளது. இது தொடர்பாக அஜித், மகிழ்...
சரத்குமாரின் 150- வது திரைப்படமாக உருவாகியுள்ளது, ‘தி ஸ்மைல் மேன்’. ஷ்யாம் -பிரவீன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் தயாரித்துள்ளார். ஆனந்த் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படம் வரும் 27 -ம் தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சரத்குமார் பேசும் போது, “இந்தப் படம்...
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி வெர்ஷனில் இந்தப் படம் ரூ.618 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் 2வது மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் படம் ரூ.60 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே படத்தில் இடம்பெற்ற ’கிஸ்ஸிக்’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் திரையுலக பயணத்தில் ரூ.1500 கோடி...
சமீபத்தில் இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’. இரண்டு படங்களுமே பெரும் தோல்வியை தழுவியது. இரண்டுமே பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது. தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் ‘கங்குவா’ படத்துக்கான விமர்சனங்கள், சர்ச்சைகள் குறித்து சமுத்திரக்கனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “எதிர்பார்ப்பு அதிகமானதால் இப்படி நடைபெறவில்லை. அனைத்துமே வன்மம் தான். இயக்குநர் சிவா எழுதிய படைப்பு ’கங்குவா’. அதை சிவா படைப்பில் சூர்யா நடித்திருக்கிறார் என்று...
சென்னை​யில் நடைபெற்ற 22-வது சர்வதேச திரைப்பட விழா​வில் சிறந்த திரைப் படங்​களாக தேர்வான ‘அமரன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்​களுக்கு விருதுகள் வழங்​கப்​பட்டன. சிறந்த நடிகர் விருது விஜய்​சேதுப​திக்​கும், சிறந்த நடிகைக்கான விருது சாய்​பல்​லவிக்​கும் வழங்​கப்​பட்​டது. இந்திய திரைப்பட திறனாய்​வு கழகம் சார்​பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12-ம் தேதி தொடங்​கியது. இதில் 60 நாடு​களில் இருந்து 180 படங்கள் திரை​யிடப்​பட்டன. திரைப்பட விழா​வின் நிறைவு நாள்...
“படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் 8 நிமிட காட்சிகளை குறைத்துள்ளோம். கடினமான உழைப்பை செலுத்தியுள்ளோம். படம் எப்படி உள்ளது என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்” என இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை 2’ குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “விடுதலை 2’ படத்துக்கான வேலைகள் இப்போது தான் முடிந்தன. மீக நீண்ட சோர்வளிக்கும் வேலை இது. படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் 8 நிமிட காட்சிகளை...
ஜேம்ஸ் கன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூப்பர்மேன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரமான சூப்பர்மேனை அடிப்படையாகக் கொண்டு 70-களில் இருந்து திரைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. கடைசியாக ஜாக் ஸ்னைடர் இயக்கிய டிசி படங்களில் சூப்பர்மேனாக ஹென்றி கெவில் நடித்திருந்தார். தற்போது டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறைவடைந்ததால் ஹென்றி கெவில் டிசி படங்களில் இருந்து வெளியேறி விட்டார். மார்வெல் நிறுனத்தின் ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’...
கார்த்தி நடித்த ‘சகுனி’ பட இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. 2012ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் சகுனி. சந்தானம், ப்ரணிதா சுபாஷ், ராதிகா, நாசர் உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு சங்கர் தயாள் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது....
இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட ‘லாபதா லேடீஸ்’ படம், போட்டியில் இருந்து வெளியேறியது. சர்வதேச அளவில் திரைப்படத்துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். இதில் ‘சிறந்த சர்வதேச திரைப்படம்’ என்ற பிரிவுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து படங்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்தியாவில் இருந்து ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமாக ஒரு படம் அனுப்பப்பட்டு வருகிறது. 97-வது ஆஸ்கர் விருதுக்கு ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை, இந்திய திரைப்படக்...