ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? - ‘இந்தியன் 2’ பெற்ற மோசமான வரவேற்புக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில்...
பொழுதுபோக்கு சினிமா என்று வந்துவிட்டால் ஷங்கர் தான் ஒரிஜினால் கேங்ஸ்டர் இயக்குநர் என்று இயக்குநர் ராஜமவுலி புகழாரம் சூட்டியுள்ளார். ‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: “இந்த படம் ஷங்கருக்கு தெலுங்கில் முதல் படமாக நான் பார்க்கவில்லை. காரணம் எங்களில் பலருக்கும் அவர் ஒரு தமிழ் இயக்குநர் அல்ல. தெலுங்கு இயக்குநர். ஷங்கர் மீதான அன்பு மற்றும் மரியாதை...
’அண்ணாத்த’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்த அதிருப்தியை நடிகை குஷ்பு வெளிப்படுத்தியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை குஷ்புவிடம் ஒரு படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டதுண்டா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்தியில் சில படங்களும், தென்னிந்தியாவில் சில படங்களும் இருப்பதாக கூறினார். அதில் ‘அண்ணாத்த’ படத்தை அவர் குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்போது அவர் கூறியதாவது: “‘அண்ணாத்த’ படத்தில் மீனாவும் நானும் நடித்தோம். நாங்கள் இருவரும்...
இந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்ற நிலை கரோனா​வுக்கு பிறகு மொத்​தமாக மாறி​விட்​டது. அதற்கு முன் தென்னிந்தியா​வில் இருந்து ‘பாகுபலி’ போன்ற படங்கள் தங்கள் இருப்​பைக் காட்​டி​விட்டுப் போனாலும், கடந்த சில வருடங்​களாகத் தென்னிந்திய சினி​மா​வின் தாக்கம் இந்தியா முழு​வதும் பரவி​யிருக்​கிறது. அதன்படி 2024-ம் ஆண்டு பான் இந்தியா முறை​யில் வெளி​யாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த தென்னிந்திய திரைப்​படங்கள் இவை. பிரேமலு, மகாராஜா: மலையாளத்​தில் உருவான ‘பிரேமலு’,...
சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ள படம், ‘பயாஸ்கோப்'. வரும் 3-ம் தேதி வெளியாகும் இதில் சத்யராஜ், சேரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாஜ்நூர் இசையமைத்துள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பும், 'ஆஹா ஃபைண்ட்' டிஜிட்டல் தளத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நடைபெற்றது. இதில் ஆஹா டிஜிட்டல் தள தலைமை நிர்வாக அதிகாரி ரவிகாந்த், ‘புரொடியூசர் பஜார்’ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. திருநாவுக் கரசு, இணை நிறுவனர் விக்ரம், இயக்குநர்...
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டென் ஹவர்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது . சிபிராஜ் சில படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்தது. தற்போது புதிய படமொன்றில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. மேலும், ‘விடாமுயற்சி’ வெளியாகாத காரணத்தினால், இப்படம் பொங்கல் வெளியீடு என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள இப்படத்துக்கு ‘டென் ஹவர்ஸ்’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். இதில் சிபிராஜுடன்...
“அஜித் விரும்பினார், அவருக்காக செய்ததுதான் ‘விடாமுயற்சி’ படம்” என்று இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். ‘விடாமுயற்சி’ படம் குறித்து முதன்முறையாக பேட்டியொன்றை அளித்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. அதில், “இந்தப் படம், அசாதாரண ஹீரோவை கொண்டிருக்கும். வழக்கமான, மாஸ் ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படங்களை போல் அல்ல. நான் விரும்புவதெல்லாம், எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி , திறந்த மனதுடன் திரையரங்குக்கு வருவதுதான். ‘விடாமுயற்சி’ என்பது, உங்களையும் என்னையும் போன்ற ஒரு சாதாரண மனிதனைப்...
மும்பையை விட்டு செல்ல விரும்புவதாக அனுராக் கஷ்யப் காட்டமாக தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகில் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் அனுராக் கஷ்யப். தற்போது அவருடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்போது பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் திரையுலகம் செயல்பாட்டு முறை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் அனுராக் கஷ்யப். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “செலவு...
சிம்பு - தேசிங்கு பெரியசாமி இணையவுள்ள கதை குறித்து தயாரிப்பாளர் தாணு சிலாகித்து பேசியிருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. முதலில் இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. படத்தின் பொருட்செலவு அதிகமாக இருப்பதால், தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகிவிட்டது. இதனிடையே, தேசிங்கு பெரியசாமி படத்தின் கதை குறித்து பேட்டியொன்றில் தாணு பேசியிருக்கிறார். அதில், “தேசிங்கு பெரியசாமி...
உலகளவில் ‘டாக்சிக்’ படத்தை வெளியிட, ஹாலிவுட் நிறுவனத்துடன் அப்படக்குழு பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை டிசம்பர் மாதம் வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதனிடையே, இப்படத்தை உலகளவில் வெளியிட யஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பிரபல ஹாலிவுட்...