நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்படத்துக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.
இதையொட்டி நடிகை ஸ்ரேயா, ரஜினியுடன் இருக்கும் புகைப் படத்தை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, ‘ஹாப்பிடே’ என...
ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படம், ‘நிஞ்ஜா’. இதில் பிரார்த்தனா, ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி மற்றும் கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடிக்கின்றனர்.
முருகு இயக்கும் இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக் ஷன்ஸ் சார்பில் எஸ்.சாய் தேவானந்த், கே.எஸ்.சினிஷ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு முதலில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க இருந்தார். இப்போது ஷான் ரோல்டன்...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் டிஆர் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘அரசன்’. ‘வடசென்னை’ சினிமாடிக் யுனிவர்ஸாக உருவாகும் இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்குச் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் வட சென்னை செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் சென்னை தரமணியில்...
நடிகை எமி ஜாக்சன், தமிழில், ‘மதராசப்பட்டினம்’, ‘தெறி’, ‘2.0’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ள அவர், ‘சூப்பர்கேர்ள்’ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார். இவர் ஜார்ஜ் என்பவரை காதலித்தார்.
2019-ம் ஆண்டில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆண் குழந்தையும் பிறந்தது. சில காரணங்களால் 2021-ல் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்த எமி, 2024-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம்...
திரைப்பட படப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்து திரைப்படப் பணிகளையும் செப். 1 முதல் நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பெப்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
‘செப். 1 முதல் வெளியாகும் திரைப்படங்களை, 8 வாரம் கழித்துத் தான் ஓடிடி-யில் வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்த படங்களைத் திரையிட அனுமதிக்க முடியும்’ என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.
இதைக் கண்டித்து...
ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது மகளும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தை முடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை அடுத்து ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்ரன், ராஷி கன்னா உள்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவதாக அவர் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில்,...
பரிதாபங்கள் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’. இதில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி.ஷங்கர், எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கும் இப்படத்துக்கு அபிஷேக் ஒளிப்பதிவு செய்கிறார். ஆன்ஷ்வா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது.
“90’ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை இப்படம் சுவாரஸ்யமாக சொல்லும். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை திரையில் பிரதிபலிக்கும் வகையில்...
இசை ரசிகர்கள் மற்றும் முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்தும் நோக்கில் ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ’ என்ற பக்திப் பாடல் உருவாகி உள்ளது. இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டே ஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான டிவோ மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் பாடலை தயாரிப்பாளரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே.கோபி உருவாக்கியுள்ளார். வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசை அமைத்துள்ளார்.
இதுபற்றி ஜெயம் எஸ்.கே.கோபி கூறும்போது,...
ஜெயராம், சிம்ரன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ஃபேமிலி ரொமான்டிக் காமெடி படமான இதில் பொன்வேல், தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கின்றனர். தீபக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். கவுதம் ராஜ் இயக்குகிறார்.
ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜயபாண்டி மற்றும் ஷாஜகான் ஜி இணைந்து தயாரிக்கின்றனர். த ஷோ பீப்பிள் சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார்....
மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் காதல் கதையாக ‘அமரம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஐரா அகர்வால், ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ள னர். திருஅருள் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படம் ஆக.28-ல் வெளியாக உள்ளது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. படம் பற்றி இயக்குநர் திரு அருள் கிருஷ்ணன்...









