அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்கும் படம், ‘திக். திக்.. திக்...’. இதில் பாவல் நவகீதன், ஜேஎஸ்கே சதீஷ் குமார், சாந்தினி தமிழரசன், சாண்ட்ரா ஏமி, பிஜேஷ் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தைத் தயாரிக்கிறது. ரகு ராஜகோபால் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு டிகே இசையமைக்கிறார்.
“சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம் இது. ஒரே இரவில் நடைபெறும் பரபரப்பான த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது....
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலெலோ’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் தலைப்பின் ப்ரமோ இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் முழு பாடலையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
‘அலே போலெலோ’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை அனிருத் இசையமைத்து பாடி இருக்கிறார். கேரள கலாச்சார பின்னணியில் பாடல் படமாக்கப்படுள்ளது.
ஆ... அக்கம்பல போலே.....
தென்னிந்தியத் திரைப்பட உலகின் மூத்த நடிகை சவுகார் ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.
பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை செனடாப் சாலையில் வசித்து வந்த அவர், வயது மூப்பு மற்றும் சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாகப் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். புதன்கிழமை இரவு அவருடைய...
சவுகார் ஜானகியின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய சவுகார் ஜானகியின் கலைப்பணி என்றும் போற்றத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்ம விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள அவருடைய மறைவு திரையுலகத்துக்கு...
சினிமா தொடங்கிய காலம் முதல் கதாநாயகர்களின் ஆதிக்கமுள்ள துறையாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு இணையான வாய்ப்புகளும் இடமும் நாயகிகளுக்கு கிடைப்பது எளிதானதல்ல. அதையும் மீறி சில நடிகைகள் அழுத்தமான பாத்திரங்களில் நடித்து பார்வையாளர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். பானுமதி, பத்மினி, ஜெயலலிதா என தொடரும் வரிசையில் மறக்க முடியாத பெயர், சவுகார் ஜானகி.
பரிதாபத்தை வரவழைக்கும் கதாபாத்திரங்களில் அவர் இயல்பாக பொருந்திவிடுவதால் அதுபோன்ற படங்கள் அதிகம் கிடைத்தன....
ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கன்னடத்து பைங்கிளி’.
இதில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதை சிங்கம் புலி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி இயக்கியுள்ளார். இதில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். எம்.பி.எம். என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்துமதி கோபி...
டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியன் (DIT): நவீன சினிமாவின் டிஜிட்டல் பாதுகாவலர் | ஒளி என்பது வெளிச்சமல்ல 46
admin - 0
டிஜிட்டல் சினிமா யுகத்தில் திரைப்படத் தயாரிப்பின் மிக முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்களில் ஒருவர் டிஜிட்டல் இமேஜிங் டெக்னீஷியன் (DIT) ஆவார்.
ஒரு காலத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஃபிலிம் ரோல்கள் லேப்களுக்கு அனுப்பப்பட்டு, அவை பாதுகாப்பாக டெவலப் செய்யப்பட்ட பிறகே ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நிம்மதியடைந்தனர்.
இன்று ஃபிலிம் லேப்கள் இல்லையென்றாலும் அந்தப் பொறுப்பு மறைந்துவிடவில்லை. அது டிஐடி என்ற நவீன தொழில்நுட்பக் கலைஞரின் தோள்களுக்கு வந்து சேர்ந்துள்ளது.
பலருக்கு டிஐடி என்றால் மெமரி கார்டிலிருந்து...
‘சில படங்கள் வாழ்ந்து உணரப்படுவதற்கானது. ‘தி ஒடிசி’ படம் சினிமாவைக் கடந்த ஓர் அனுபவம்’ என்று இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அட்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘சில படங்களை நீங்கள் பார்க்கலாம், சில படங்களை நீங்கள் வியக்கலாம், வெகு சில படங்கள் மட்டுமே உங்களை முற்றிலும் வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். ‘தி ஒடிசி’ எனக்கு அதைச் செய்தது.
நோலனின் கதை சொல்லல் வியக்க...
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள், வெளியாக இரண்டு நாள் இருக்கும் நிலையில், பாடலின் தலைப்பை ப்ரொமோ வீடியோவாக படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
படத்தின்...
உடல்நலக்குறைவால் நடிகை சவுகார் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு வயது 94.
ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தில் கடந்த 1931-ல் டிசம்பர் 12-ம் தேதி அவர் பிறந்தார். கடந்த 1950 முதல் அவரது திரை பயணம் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில்...









