‘காந்தாரா’ பட விவகார வழக்கில் சாமுண்டி கோயிலில் ரன்வீர் சிங் மன்னிப்பு கேட்க உத்தரவு

0
121

 கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரன்வீர் சிங் பேசுகையில், ‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டியை பாராட்டினார்.

மேலும் காந்தாரா படத்தில் இடம்பெறும் சாமுண்டி தெய்வத்தை போன்று நடித்துக் காட்டினார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் ரன்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் சி.ஜி.மலையாளி, நடிகர் ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்குவந்தது.

அப்போது மனுதாரரான வழக்கறி ஞர் சி.ஜி.மலையாளி, ”ரன்வீர் சிங் நேரடியாக வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். வழக்கறிஞர் குழு மூலம் மன்னிப்பு கேட் பதை ஏற்க கூடாது”என வாதிட்டார். அதற்கு நீதிபதி நாகபிர சன்னா, ”ரன்வீர் சிங் செய்தது சரியல்ல.

கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை. சாமுண்டி மலைக்கு வந்து தெய்வத்தை வணங்கி, மன்னிப்பு கேட்கட்டும். அதன் பிறகு வழக்கை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம்” என்றார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்.10-க்கு ஒத்தி வைக்கப்பட்ட‌து.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here