சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சமந்தா

0
15

பிரபல நடிகை​யான சமந்தா சின்​னத்​திரை​யில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்​ளார். சோனி லிவ் மற்​றும் சோனி விழா சேனல்​களில் இந்​நிகழ்ச்சி வெளி​யாக இருக்​கிறது.

தமிழ் திரை​யுல​கின் முன்​னணி பிரபலங்​கள் பலர் இதில் பங்​கேற்​கிறார்​கள். தமிழ் ரசிகர்​களுக்​காக புதிய வடி​வில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்​நிகழ்ச்சி பற்றி சமந்தா கூறும்​போது, ‘‘இந்த நிகழ்ச்​சியை அனை​வருட​னும் பகிர்ந்து கொள்​வ​தில் மகிழ்ச்​சி. நான் இது​வரை செய்த நிகழ்ச்​சிகளில் இருந்து முற்​றி​லும் வேறு​வகை​யில் இந்த ‘செலிபிரட்டி மாஸ்​டர் செஃப்’ நிகழ்ச்சி இருக்​கிறது.

அது​தான் இந்த நிகழ்ச்​சியை ‘வேண்​டாம்’ என்று சொல்ல முடி​யாத அளவு என்னை வெகு​வாக ஈர்த்​தது. உணவு என்​பது மக்​களை ஒன்​றிணைக்​கும், அழகான நினை​வு​களை உரு​வாக்​கும், நம்​முடைய மற்​றொரு பக்​கத்தை வெளிப்​படுத்​தும் அற்​புத​மான ஆற்​றல் கொண்​டது.

நமக்​குப் பிடித்த தமிழ் பிரபலங்​கள் சமையலறைக்​குள் வந்து புதிய முயற்​சிகளை எடுத்​து,தங்​களையே ஆச்​சரியப்​படுத்தி அதிக ஆர்​வத்​துட​னும் உணர்​வுட​னும் போட்​டி​யிடு​வதைப் பார்ப்​ப​தற்​காக ​நான்​ ஆவலுடன்​ ​காத்​திருக்​கிறேன்​” என்​று தெரி​வித்​து உள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here