அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி டோர்ம்’. இதில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து, ஃபெரோஜ் என பலர் நடித்திருக்கிறார்கள். இளைய
ராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.
குட் ஸ்டஃப் புரொடக் ஷன்ஸ் சார்பில் ஈ.ஆர்.டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதை விஜய் சேதுபதி அவருடைய சமூக ஊடகத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.















