Google search engine
சினிமா என்பது கூட்டுக் கலை. இந்தக் கலையில் இயக்குநர்களின் பார்வையை அப்படியே திரையில் கொண்டு வருவது ஒளிப்பதிவு. காட்சிகளின் தன்மையையும் நடிகர்களின் உணர்ச்சிகளையும் பிரம்மாண்டமாக திரையில் கொடுக்கும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், ராம்ஜி. பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், தனி ஒருவன், ஒத்த செருப்பு உட்பட பல பேசப்பட்ட படங்களின் ஓளிப்பதிவாளர். செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் பணியாற்ற இருக்கும் ராம்ஜியை, சந்தித்தோம்... “இயக்குநர் செல்வராகவனோட தொடர்ந்து 3 படங்கள்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம், ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் உபேந்திராவும் நடிக்க இருக்கிறார். அவர், இந்தப் படத்தின் லுக் டெஸ்டில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். பிறமொழிகளில் இருந்து மேலும் சில நடிகர்கள் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் இப்போது நடந்து வரும் நிலையில், பிரபல...
பாண்டிக்கு (சூரி) என்று முடிவு செய்யப்பட்ட முறைப் பெண் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக, அவர்கள் குடும்பத்தினர் நம்புகின்றனர். அதனால், அவரை பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பயணத்தில், குடும்பத்தினர் இடையிலான உரையாடல் மற்றும் செயல்களின் வழியாக, உண்மையில் யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது? அது எப்படிப்பட்ட பேய்? அதற்கான சிகிச்சை என்ன? என்பதை நுட்பமான காட்சிகளின் வழியாக உணர்த்திச் செல்கிறது கதை. ஒரு...
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்த இந்தப் படம் தமிழ், தெலுங்கில் கடந்த 15-ம் தேதி வெளியானது. வரும் 30-ம் தேதி இந்தியில் வெளியாக இருக்கிறது. கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்தப்படம், இப்போது உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்குவதாக...
நடிகை நித்யா மேனன், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷுடன் அவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ சூப்பர் ஹிட்டானது.இந்தப் படத்துக்காக அவருக்குச் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், தனுஷுடன் மீண்டும் நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “திருச்சிற்றம்பலம்' படத்துக்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். அவரே அதை இயக்குகிறார். அதுவும் சிறந்த படமாக இருக்கும்”...
யோகிபாபு, லட்சுமி மேனன், காளி வெங்கட், குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மலை’. அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். “மனித வாழ்வு இயற்கையோடு இணைந்தது. ஆனால், மனித பேராசை இயற்கையை மொத்தமாக அழிவின் விளிம்பில் கொண்டு வந்து...
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள 'வெள்ளக்கெவி' கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, உண்மைச் சம்பவ பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. கதாநாயகனாக ஆதவன் அறிமுகமாகிறார். ஷீலா, ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, உமர் ஃபரூக் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலசுப்பிரமணியன் இசையமைக்கிறார்.படம் பற்றி...
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர். செப்.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்...
தமிழில் 1930-40 களில் வெற்றிகரமான இயக்குநராக இருந்தவர்களில் ஒருவர் பி.என்.ராவ். நடனத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய படம், ‘நாட்டிய ராணி’. வைஜயந்தி மாலாவின் தாய் வசுந்தரா தேவி நாயகியாக நடித்தார். மைசூரில் பிரபலமான கர்னாடக இசைக் கலைஞராக இருந்த பி.எஸ்.ராஜா அய்யங்கார் நாயகன். பி.எஸ்.சரோஜா, ஜெயம்மா, டி.எஸ்.பாலையா, ‘பம்பாய்’ சார்லி, நவநீதம் என பலர் நடித்தனர். இலங்கை நடிகை தவமணி தேவி சிறிய வேடத்தில் நடித்தார். பாபநாசம் சிவன்...
நானி, நாயகனாக நடித்துள்ள படம், ‘சூர்யா'ஸ் சாட்டர்டே'. விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில், எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது: இதுவரை பல ஆக்ஷன் படங்கள் வெளியாகி...