குமரி: கடலில் கிறிஸ்மஸ் கொண்டாடிய வாலிபர் பலி

குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரெஜின் ஜாஸ்பின் (34) என்பவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குளச்சல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து 9 பேருடன் படகில் கடலுக்குச் சென்றபோது, கரை திரும்பும் போது படகிலிருந்து கீழே இறங்கும்...

நாகர்கோவில்: சென்டர் மீடியன்களை அகற்ற கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட சென்டர் மீடியன்கள் தற்போது விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. குறுகிய சாலைகளில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால், இந்த சென்டர் மீடியன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‎திங்கள்நகர்: மார்சல் நேசமணி பூங்கா திறப்பு 

திங்கள்நகர் தேர்வு நிலை பேரூராட்சி தலக்குளம் சாலையில் உள்ள மார்ஷல் நேசமணி பூங்கா, ரூ. 33 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு, நேற்று பிரின்ஸ் எம்எல்ஏ-வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் பேரூராட்சி தலைவர் சுமன் தலைமையில் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்....

உண்ணாமலைகடை: பேரூராட்சி துணைத் தலைவருக்கு அடி – உதை

உண்ணாமலைகடை பேரூராட்சியின் துணைத் தலைவர் செல்வின் (34) குழிச்சவிளை பகுதியில் சாலை பக்க சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் தகராறு செய்து, கம்பாலும் கல்லாலும் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு...

குழித்துறை: தாய், மகளுக்கு கொலை மிரட்டல் 3 பேர் மீது வழக்கு

குழித்துறை, கழுவன்திட்டையைச் சேர்ந்த விமலா (38) என்பவருக்கும், அவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஹரிஷ் (35) என்பவருக்கும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று விமலாவின் மகள் வீட்டு முன் நின்றபோது, ஹரிஷ், சாம்ராஜ் (52) மற்றும் சாம்ராஜின் மனைவி விமலா...

கருங்கல்: பெந்தேகொஸ்தே சபை மீது கல்வீச்சு

கருங்கல், இடையன்கோட்டையில் உள்ள பெந்தேகொஸ்தே சபை மீது நேற்று முன்தினம் இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கல் வீசி ரகளையில் ஈடுபட்டார். கருங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் அழைத்து வரப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர்...

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஆட்டோ ஓட்டுநர் டென்னிஸ் ஏசுவடியான், தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்றபோது, மேலராமன்புதூரைச் சேர்ந்த சோபிகுமார் என்பவர் வழிமறித்து, முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த டென்னிஸ் ஏசுவடியான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நேசமணி நகர்...

குளச்சல்: கஞ்ச வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது

குளச்சல் போலீசார் நேற்று கொட்டில்பாடு, நவஜீவன் காலனி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சஜின், சிவிசன், பிரின்ஸ் ஆகிய மூன்று இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் பைக்கில் தப்ப முயன்றனர். அவர்களை நிறுத்தி சோதனை செய்ததில், 10 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளைஞர்கள் கஞ்சா...

அருமனை: 2ம் மனைவி பிரிந்ததால் வாலிபர் விஷம் குடித்து சாவு

அருமனை பகுதியை சேர்ந்த பிபின் (29), ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை செய்து வந்த நிலையில், முதல் மனைவி பிரிந்து சென்றார். சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்தப் பெண் பெற்றோருடன் சென்றதால் மனமுடைந்த பிபின், நேற்று வீட்டில் விஷம்...

குழித்துறை: ரயில் விபத்தில் இறந்த தவெக நிர்வாகி

பாறசாலை ரயில் பாதையில் ஒரு வாலிபர் நேற்று (டிசம்பர் 22) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.  நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடல் நசுங்கி கிடந்த சடலத்தின் அருகில் கிடந்த  செல்போன் அடிப்படையில் விசாரித்த போது, இறந்தவர் களியக்காவிளை  பகுதியை சார்ந்த அருள்தாஸ் மகன் ஜெரின் (25)....