குளச்சல்: பேரன் இறந்ததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

குளச்சல் அருகே உள்ள லியோன் நகரை சேர்ந்தவர் வர்கீஸ் மனைவி சகாயமேரி (54). இந்த தம்பதிக்கு சகாய டேனியல், சகாய லிபியா என்ற மகனும் மகளும் உள்ளனர். இதில் சகாய லிபியாவுக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் லிஜோன் (8) உடல்...

கொல்லங்கோடு: குருசடி, கோவில் உண்டியலை திருடியவர் கைது

கொல்லங்கோடு அருகே கோனசேரி புனித அந்தோனியார் குருசடி மற்றும் பிராகோடு பரிதர்மசாஸ்தா கோவிலில் உள்ள உண்டியல்களை உடைத்து திருடியதாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (29-ம் தேதி) மாலை ஊரம்பு சந்திப்பில் வைத்து உண்டியல் திருட்டில் சம்பந்தப்பட்ட மேல்பாலை...

திருவட்டாறு: தாய் மொபைலுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி, மாணவி மாயம்

திருவட்டார் அருகே தோட்டவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று சௌமியா கல்லூரிக்குச் செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றார். சென்ற சிறிது நேரத்தில் அவரது தாய் அகிலா என்பவரின் செல்போனுக்கு மெசேஜ்...

முஞ்சிறை: திமுகவினர் திடீர் போராட்ட முயற்சி

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குளப்புறம் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் செல்வன் என்பவர் ஊராட்சி தலைவர் மனோன்மணிக்கு, பொதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஊராட்சியின் வளர்ச்சிக்கு தடையாக செயல்படுவதாகவும் புகார் எழுந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரை இடமாற்ற வேண்டும் என கேட்டு முஞ்சிறை ஊராட்சி...

நாகர்கோவில்: தவறவிட்ட மணிப்பர்ஸை மீட்டுக்கொடுத்த போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் இன்று(நவ. 28) காத்துநின்ற பெண்மணி ஒருவர் தான் வைத்திருந்த மணிப்பர்சை தவறவிட்டுவிட்டார். அதில், ஆயிரக்கணக்கில் பணம் இருந்தது, உடனடியாக வடசேரி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு தவறவிட்ட மணிப்பர்சை மீட்டுக்கொடுத்தனர், உடனே...

நாகர்கோவில்: காசி விஸ்வநாதர் கோயில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷதன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம். நேற்று தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி நாகர்கோவில் கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோயிலில் சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், களபம் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீபாராதனையும்...

இரணியல்: போலி நகை அடகு; பல கடைகளில் மோசடி

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (67). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் அடகு வைக்க சென்ற போது, இவர் அதே கடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு போலி நகை வைத்து ஏமாற்றியது தெரிய வந்தது.  உடனடியாக...

களியக்காவிளை: நச்சுயிரி கொள்ளை நோய் தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடுகள், செம்மரி ஆடுகளை தாக்கும் நச்சுயிரி நோய் பரவலாக பரவி வருகிறது. இந்த நோய் ஆடுகளை தாக்கி பாதிப்படைய செய்யும் வைரஸ் கிருமி ஆகும். இந்த நோய் தாக்கினால் ஆடுகளுக்கு, சளி, இருமல், காய்ச்சல், கருச்சிதைவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.  ஆகவே முன்கூட்டியே...

அடைக்காக்குழி: கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

கொல்லங்கோடு அருகே அடைக்கக்குழி பகுதி முகிலன் தரை என்ற இடத்தில் தர்ம சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு அம்மன், கணபதி, சிவன் சன்னதிகள் உள்ளன. நேற்று முன்தினம்  (நவம்பர் 27) இரவு அம்மன் சன்னதியில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால்,...

பார்த்திபபுரம்: கோயில்  சிலை திருட்டு; மேலும் ஒருவர் கைது

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் மிகப் பழமையான பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்த கோயிலில்  கடந்த 13-ம் தேதி  இரவு யாரோ மர்ம நபர்கள் கோவில் மதில் சுவரை ஏறி குதித்து, பிரதான கோவிலை உடைத்து  கோயில் கருவறைக்குள்  இருந்த மிகப் பழமையான 5...