கருங்கலில் எச்.ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேச விரோதி என்று விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பு குழு தலைவர் எச். ராஜாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருங்கலில் நேற்று (17-ம் தேதி) மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர்...
பைக்.. ஆம்னி பஸ் மோதி.. நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழியர் பலி
மார்த்தாண்டம் அருகே உள்ள அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் விஜயன் மகன் வினு (27). இவர் நெடுஞ்சாலை பணி ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்ள் ஆகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு வினோ பைக்கில் காட்டாத்துறையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சிராயன்குழி...
அண்ணா விளையாட்டரங்கில் குத்துசண்டை வளையம்; துவக்கிய எம்.எல்.ஏ.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள குத்துச்சண்டை வளையத்தில் மேற்கூரை இல்லாமல் இருந்தது. இதனால் பயிற்சி பெறும் வீரர்கள் அவதிப்பட்டு வந்தனர். எனவே குத்துச்சண்டை விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் மேற்கூரை அமைத்து தரும்படி நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி - யிடம் கோரிக்கை...
காந்தி சிலை உடைத்தவர்களை கைது செய்ய எம்.எல்.ஏ. கோரிக்கை
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோட்டில் இரணியல் சர்வோதய சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தி மணிமண்டபம் உள்ளது.
இங்கு அமர்ந்த நிலையில் கருங்கல்லில் செய்யப்பட்ட மகாத்மா காந்தி உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. மகாத்மா...
ஓணம் பண்டிகை; தோவாளையில் பூக்களின் விலை உயர்வு
குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தையில் தினந்தோறும் பல டன் பூக்கள் விற்பனையாகிறது ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை யொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். அந்த வகையில் நாளை (செப்.,15) ஓணம் பண்டிகை என்பதால் தோவாளையில் பூக்கள் விற்பனை...
அந்தரபுரம் சுடலை கோயிலில் ஆவணி சிறப்பு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் அந்தரபுரம் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசுவாமி திருக்கோயில் சார்பில் ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நேற்று (செப்.,13) நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் சுடலைமாட சுவாமிக்கு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோவாளை ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு உறுப்பினர்...
குமரி மாவட்டத்தில் 1,300 ரேஷன் கார்டுகள் அச்சடிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக 5,964 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 4,180 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு, முடிக்கப்பட்டுள்ளது. இதில் 1,300 குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் இந்த பணி முடிவடையும். பின்னர்...
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமினை பார்வையிட்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பகுதி கோழிவிளை இலங்கைவாழ் தமிழர் மறுவாழ்வு முகாமினை குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று (செப்.,13) பார்வையிட்டார்.
இம்முகாமில் 108 குடும்பங்களை சார்ந்த 333 நபர்கள் வசித்து வருகின்றனர். இம்முகாமில் வசிக்கும் 10 குடும்பங்களை சேர்ந்த...
தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன், தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வசந்தம் நகர் பகுதியில் உள்ள மதுபார் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் மேல பெருவிளை பகுதியை சேர்ந்த கார் டிரைவரான செல்வன் ஜெபராஜ் (வயது 29) வந்தார்.
அவர் ரவீந்திரனிடம் மது குடிக்க...
கட்டிட தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவர் பனிஷ் (வயது 35), கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று அப்பகுதியில் பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைக்கு பூஜை நடந்தது. பூஜை முடிந்து பிரசாதம் கொடுக்கும் போது ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை பனிஷ் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் பனிசுக்கும்,...













