கன்னியாகுமரி மாவட்டம் அந்தரபுரம் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசுவாமி திருக்கோயில் சார்பில் ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நேற்று (செப்.,13) நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் சுடலைமாட சுவாமிக்கு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தோவாளை ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு உறுப்பினர் பூதலிங்கம் பிள்ளையும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.