கன்னியாகுமரி: இரு தினங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை
கன்னியாகுமரி உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மே 7, 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...
குமரியில்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு -7 பேர் மீது வழக்கு
பழவிளை மின்வாரியம் சார்பில் இன்று மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்துபாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்வாரிய பணியாளர்கள் உட்பட 7 பேர்...
குளச்சல்: பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
குளச்சல் போலீஸ் நிலையம் அருகே ராஜேஷ் என்பவரின் பழக்கடை மற்றும் பேக்கரியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த ஆப்பிள், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பழங்கள் மாயமாகியிருந்தன. இது குறித்து குளச்சல் போலீசில் புகார்...
குமரியில்: கோயிலில் கொதிக்கும் எண்ணெய், மஞ்சள் நீரால் அபிஷேகம்
குலசேகரம் முத்தாரம்மன் கோயில் எட்டாம் கொடை விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கொதிக்கும் உருக்கு எண்ணெய் மற்றும் கொதிக்கும் மஞ்சள் நீரால் பக்தர்கள் அபிஷேகம் செய்து கொண்டனர். விரதமிருந்த பக்தர்கள் அம்மன் அருள் வந்து சாமி ஆடியபடி, இந்த அபிஷேகத்தை தங்கள்...
களியக்காவிளை: ராகுல் காந்திக்கு எதிராக திமுக போராட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை நெருங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளிலேயே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக ஆட்சி அமைக்க அமைச்சர் பதவி உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நேற்று (மே 6) இரவு...
ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்
தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் சென்னை ஆளுநர் மாளிகை வந்தடைந்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அவரை நேரில் சந்தித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். காங்கிரஸ் ஆதரவை தொடர்ந்து தற்போது தவெக வசம் 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இருந்தாலும்...
கிள்ளியூர்: ராஜேஸ்குமார் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ராஜேஸ்குமார், மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறையும் இவரே இப்பதவியை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரியில்: அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் முடிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், IPS தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பரப்புரை முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் துல்லியமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நிறைவு பெற்றது. அனைத்து தரப்பினரின்...
கோடிமுனை: கடற்கரையில் இன்ஜின் பாகங்கள் திருட்டு
கோடிமுனை பகுதியில் கடற்கரை மணல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வள்ளங்களில் இருந்து இன்ஜின் மூடிகள் திருடப்பட்டுள்ளன. புதூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது வள்ளத்தில் இன்ஜின் மூடி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரித்தபோது, மேலும் 13 மீனவர்களின் வள்ளங்களில் இருந்த இன்ஜின் மூடிகள்...
தக்கலை: நீதிமன்றத்தில் போதையில் இடையூறு; ஒருவர் கைது
குமரி மாவட்டம் தக்கலை அருகே வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த கண்ணபிரகாஷ் (43) என்பவர், நேற்று (மே 5) தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில்...













