Google search engine

புதுக்கிராமத்தில் கார் மின்கம்பத்தில் மோதி விபத்து

கன்னியாகுமரி புதுக்கிராமம் பஸ் நிலையம் அருகே இன்று (மே 21) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. காரில் ஆறு பேர் பயணம் செய்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும்...

தவெக அமைச்சரவையில் இடம் பிடித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராக பெறுப்பேற்றுள்ளனர். இவர்களுக்கு  என்ன துறை ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாகர்கோவிலில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல் மற்றும் சி. என். ஜி விலை உயர்வை கண்டித்து, இடதுசாரி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. பி. ஐ. (எம்) மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், முன்னாள் எம். பி. பெல்லார்மின், சி. பி. ஐ மாவட்ட...

குளச்சல்: 14 பவுன் நகை, பணத்துடன் இளம் பெண் மாயம்

வாணியக்குடியைச் சேர்ந்த 24 வயதான அவந்திகா சினிமோள், தனியார் நிதி நிறுவன ஊழியர், தனது காதலனுடன் வீட்டை விட்டு மாயமானார். அவர் வீட்டில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 3.5 லட்சத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவந்திகாவின் பெற்றோர் அளித்த...

குலசேகரம்: கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேங்கபாறை விளை பகுதியைச் சேர்ந்த அஜித் (27) மற்றும் புல்லுவிளை பகுதி அபிஷேக் (26) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் மீதும் சட்டப்பிரிவுகளின்...

களியக்காவிளை: கோவிலில் வெண்கல விளக்கு திருடியவர் கைது

மேக்கோடு பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் இருந்து 36.5 கிலோ எடையுள்ள வெண்கல குத்துவிளக்கை திருடியதாக ஆல்வின் (34) என்ற கொத்தனார் கைது செய்யப்பட்டார். கோயில் தலைவர் குமார் சிங் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு...

குமரி பெண் தலைமை காவலருக்கு தேசிய விளையாட்டில் பதக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மே 9 முதல் மே 13 வரை நடைபெற்ற அகில இந்திய காவல்துறையின் தேசிய பேட்மிண்டன் தொடர்-2026 போட்டியில், கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலர் ஜீவா 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தேசிய...

விளவங்கோடு: 2 வாகனங்களில் 3 ஆயிரம் ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் K M. பாரதி தலைமையிலான குழுவினர், 20-ம் தேதி விளவங்கோடு வட்ட பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர். காரோடு என்ற இடத்தில் சொகுசு காரை 37 கி.மீ. துரத்திச் சென்று, கேரளாவில்...

கிள்ளியூர்: குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 19 வழியோர ஊரக குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400மி. மீ விட்டமுள்ள OPVC குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது. கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குழி சாலையில் நடைபெற்று வரும்...

பளுகல்: வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை

மணிவிளை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (44) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரது மனைவி விஷ்ணுபிரியா (31) வங்கிப் பணியாளர் ஆவார். சதீஷ்குமாரின் குடிப்பழக்கத்தால் விஷ்ணுபிரியா குழந்தையுடன் தனது அண்ணன் வீட்டில் தங்கி உள்ளார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து...