Google search engine

களியல்: தேவாலயம் சென்ற சிறுமி மீது தாக்குதல்

களியல் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுரேஷின் 16 வயது மகள், தேவாலயத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த 3 பெண்கள் அவதூறாக பேசி, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி அருமனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடையாலுமூடு போலீசார்...

கொல்லங்கோடு: தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

கொல்லங்கோடு, பனவிளை பகுதியை சேர்ந்த 51 வயதான தொழிலாளி விஜயன், மதுப்பழக்கத்தால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்றவர், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்து பார்த்தபோது, அவர் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்....

நித்திரவிளை: அரசு கட்டிடத்தை இடித்து தள்ளிய கும்பல்

கிள்ளியூர், மங்காடு ஊராட்சிக்குட்பட்ட குழிச்சாணி பகுதியில் இருந்த அரசு தொலைக்காட்சி பெட்டி அறையை நேற்று முன்தினம் பட்டப் பகலில் 4 பேர் கொண்ட கும்பல் கடப்பாரையால் இடித்து தள்ளியது. ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வந்த இந்த கட்டிடம் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலானது. பொதுமக்கள் அளித்த...

கால்வாய் தடுப்பு சுவர் பணிகளை தொடங்கி வைத்தார் எம். எல். ஏ

நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் பறைக்கண்கால் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் கோபால சுப்பிரமணியன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கலிங்கராஜபுரம்: வீட்டை உடைத்த கும்பல் மீது வழக்கு

கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஷர்மிளா, பாபு என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வட்டி செலுத்தாததால், பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காததால், ஷர்மிளா குடும்பத்தினர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தபோது, பாபு, அவரது தம்பி மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து ஷர்மிளாவின் வீட்டை இடித்து...

தக்கலை: காதலிக்கு கடிதம் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை

தக்கலை பகுதியைச் சேர்ந்த 21 வயதான எம்பிஏ பட்டதாரி விக்னேஷ், வெளிநாட்டு வேலை பிடிக்காமல் ஊர் திரும்பிய நிலையில், காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று (பிப்.23) வீட்டு மாடியில் காதலிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது....

மார்த்தாண்டம்: ரயில்வே போலீஸ் நிலையம் திறப்பு

குமரியில் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் 127 கி.மீ. தூரத்தை உள்ளடக்கி 1984 முதல் இயங்கி வருகிறது. குழித்தறையில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2025 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நேற்று குழித்துறை ரயில்வே கட்டிடத்தில்...

நித்திரவிளை: பெட்டிக்கடையில் மூதாட்டி செயின் பறிப்பு

நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்ற மூதாட்டி நடத்தி வந்த பெட்டி கடைக்குள், நேற்று பகல் 12 மணியளவில் முகத்தை மூடியபடி பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் புகுந்து, அவரது கழுத்தில் கிடந்த நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். நித்திரவிளை...

குமரியில் 2500 போலீஸ் பாதுகாப்பு – எஸ். பி தகவல்

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாகவும், சுமார் 2500...

குமரி: ஆர்ப்பாட்டம் – எம். பி, 3 எம்எல்ஏக்கள் பங்கேற்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து, குளச்சல் அண்ணா சிலை முன்பிருந்து பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை வரை காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பாதயாத்திரை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்...