Google search engine
வங்​கதேசத்​தில் வாழும் இந்​துக்​கள் மீதான தாக்குதல்கள் அதி​கரித்து வரு​கின்​றன. கடந்த டிசம்​பர் 2ம் தேதி பிரந்​தோஷ், உப்​தால் சர்க்​கார், டிசம்​பர் 7ம் தேதி ஜோகேஷ் சந்​திர ராய், சுபோர்ணா ராய், டிசம்​பர் 12ம் தேதி சாந்தோ சந்​திர தாஸ், டிசம்​பர் 18ம் தேதி திபு சந்​திர தாஸ், டிசம்​பர் 24ம் தேதி அம்​ரித் மண்​டல், டிசம்​பர் 29ம் தேதி பஜேந்​திர பிஸ்​வாஸ், டிசம்​பர் 31ம் தேதி கோகன் சந்​திர தாஸ்,...
பிரான்​ஸ், ஜெர்​மனி உள்​ளிட்ட ஐரோப்​பிய நாடுகளின் பரப்​பளவுக்கு இணை​யாக ஆர்​டிக் பகு​தி​யில் அமைந்​துள்ள உலகின் மிகப் பெரிய தீவாக கிரீன்​லாந்து உள்​ளது. இது டென்​மார்க் நாட்​டின் கீழ் தன்​னாட்சி பிராந்​தி​ய​மாக உள்​ளது. கிரீன்​லாந்தை சுற்​றி​யுள்ள கடல் பகு​தி​கள் தற்​போது ரஷ்​யா, சீன கப்​பல்​களால் நிரம்​பி​யுள்​ள​தாக​வும் அதனால் பாது​காப்பு காரணங்​களுக்​காக அமெரிக்கா​வுடன் கிரீன்​லாந்து இணைக்​கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் அறிவித்​தார். இதற்கு டென்​மார்க் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்​நிலை​யில்...
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ளது ஹவுன்ஸ்லோ பகுதி. இங்கு 20 பள்ளிகள் உள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தப் பள்ளிகளில் பயிலும் டீன் ஏஜ் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைக்கின்றனர். பின்னர் இவர்களை தங்கள் குழுவினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த இளம் பெண்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்தக் கும்பல் இங்கிலாந்து பெண்களை மட்டும் அல்லாமல் லண்டனில் உள்ள சீக்கிய பெண்களையும்...
ஈரானில் ரேசா பஹ்லவியால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தேவையான ஆதரவை பெற முடியுமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் நாட்டில் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அயத்துல்லா அலி காமேனி மற்றும் அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் நடத்திய...
ஈரானில் நிலவும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவு அமைச்சகம்  தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள்...
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, கடந்த ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மற்றும் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் என குறிப்பிட்டு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துகிறார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து அமெரிக்கா...
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “ஈரான் அரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்திற்கு 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது” - இது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு. உக்ரைன் - ரஷ்யா இடையே போரா அதற்கு...
அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத மற்​றும் குற்றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் உட்பட 1 லட்​சத்​துக்கும் மேற்​பட்​ட​வர்​களின் விசாக்​களை அமெரிக்க அரசு ரத்து செய்​துள்​ளது. அமெரிக்​கா​வில் கடந்த ஆண்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலை​மை​யில் ஆட்சி அமைந்த பிறகு, சட்​ட​விரோத​மாக நுழைந்​தோருக்கு எதி​ராக மட்​டுமே நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது. அதன் பிறகு சட்​டப்​பூர்​வ​மாக விசா எடுத்து வரு​வோர் மீதும் நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டன. இந்​நிலை​யில் கடந்த ஆண்​டில் மட்​டும் 8 ஆயிரம் மாணவர்​கள் உட்பட...
ஈ​ரானில் அரசுக்கு எதி​ரான போராட்​டங்​கள் தீவிரமடைந்து வரு​கின்​றன. அந்த நாட்​டில் இது​வரை 2,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஈரான் மதத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனிக்கு எதி​ராக கடந்த டிசம்​பர் 28-ம் தேதி தலைநகர் டெஹ்​ரானில் மிகப்​பெரிய போராட்​டம் வெடித்​தது. அப்​போது டெஹ்​ரானின் முக்​கிய வணிக சந்​தை​யான கிரான்ட் பஜாரில் கடைகள் அடைக்​கப்​பட்​டன. ஜென் இசட் இளைஞர்​கள் (1997 முதல் 2012-க்​குள் பிறந்​தவர்​கள்) தலைநகரில் திரண்டு மதத் தலை​வர் காமேனி, அதிபர்...