கனடா பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா - கனடா இடையே பாதிப்படைத்திருந்த உறவு மீண்டும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, அங்குள்ள இந்திய தூதர் மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது, கனடா அரசு நடவடிக்கை...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு எடுத்துள்ளது. அதில் ஒன்று இந்தியா உடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்துவது தொடர்பான அறிவிப்பு. இதனால் அந்த நாட்டில் மருந்து விநியோக சங்கிலி பெரிய அளவில்...
கனடாவில் நடந்த திருவிழாவில் பங்கேற்றவர்கள் மீது எஸ்யுவி கார் தாறுமாறாக ஓடியதில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
கனடாவின் வான்கூவர் நகரில் நேற்று முன்தினம் லாபு லாபு தினம் கொண்டாடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் காலனித்துவத்தை எதிர்த்து போரிட்ட பிலிப்பைன்ஸ் தலைவரை நினைவுகூரும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களால் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவையொட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் கிழக்கு 41-வது அவின்யூ மற்றும்...
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை கடந்த 30 ஆண்டுகளாக ஆதரித்த தவறுகளை பாகிஸ்தான் செய்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா எம்.ஆசிப் தெரிவித்திருப்பது அந்நாட்டின் ஒப்புதல் வாக்குமூலமாக பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் செய்தி நிறுவனமான ஸ்கை நியூஸ் விவாதத்தில் பங்கேற்ற குவாஜா எம்.ஆசிப்பிடம், "இந்த பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு...
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்கள் அனைவருக்கும் எனது...
இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், "அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் தேவாலயப் பணிகளை அவர் தொடர்ந்து...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது கவலை அளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பஹல்காமில் உள்ள பைசரன் அழகிய புல்வெளியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தது குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். தங்களின் உறவினர்களை...
இந்திய கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றிய வினய் நர்வால் திருமணமான ஒரே வாரத்தில், காஷ்மீருக்கு தேன்நிலவு சென்றபோது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலுக்கு நேற்று கடற்படை சார்பில் இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.
இந்திய கடற்படையில் லெப்டினன்ட்டாக பணியாற்றியவர் வினய் நர்வல் (26). ஹரியானாவைச் சேர்ந்த இவர் கொச்சியில் பணியாற்றுகிறார். இவருக்கும் ஹிமான்சி என்ற பள்ளி ஆசிரியைக்கும் கடந்த 16-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து செல்ல இவர்கள்...
போப் பிரான்சிஸின் உடல் நாளை (புதன்கிழமை) காலை 9:00 மணிக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் வாடிகன் அறிவித்துள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 88. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவர், நேற்று உயிரிழந்தார்.
நேற்று (திங்கட்கிழமை) மாலை...










