Google search engine
கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிர​வா​தி​கள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்​து​வ​மனை மீது இஸ்​ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 5 பத்​திரி​கை​யாளர்​கள் உட்பட 20 பேர் உயி​ரிழந்​த​தாக காசா பொது​மக்​கள் பாது​காப்பு முகமை​யின் செய்​தித் தொடர்​பாளர் மமுத் பசல் தெரி​வித்​துள்​ளார். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல்...
அமெரிக்​கா, கனடா, இங்​கிலாந்து உள்​ளிட்ட மேற்​கத்​திய நாடு​கள் வெளி​நாட்​டினருக்​கான குடியேற்ற விதி​முறை​களை கடுமை​யாக்கி வரு​கின்​றன. இந்த சூழ்​நிலை​யில், இந்​தி​யர்​களை அதிக அளவில் வேலை​யில் சேர்க்க ரஷ்ய நிறு​வனங்​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன. இதுகுறித்து ரஷ்​யா​வுக்​கான இந்​திய தூதர் வினய் குமார் டாஸ் செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: ரஷ்யாவில் மனித வளம் தேவைப்படுகிறது. இந்​தி​யா​வில் திறமை​யான மனிதவளம் உள்​ளது. எனவே, ரஷ்ய சட்​டங்​கள் மற்​றும் விதி​முறை​களுக்கு உட்​பட்டு அந்​நாட்டு...
ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர். ஈரானில் இருந்து ஆப்கனிஸ்தானுக்கு திரும்பியவர்கள் பயணித்த பேருந்து ஒன்று அந்நாட்டின் வடமேற்கில் உள்ள ஹிராட் மாகாணத்தில் நேற்றிரவு (உள்ளூர் நேரப்படி இரவு 8.30) விபத்துக்குள்ளானது. லாரி மற்றம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 79 ஆப்கனியர்கள் உயிரிழந்துள்ளனர்....
 அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத...
ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா லாபம் ஈட்டுவதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் விமர்சித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “மாஸ்கோவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி அதை சுத்திகரிக்கப்பட்ட பொருளாக மறுவிற்பனை செய்யும் இந்தியாவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கை. அவர்கள் இதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர். என்று பெசென்ட் விமர்சித்துள்ளார். பெசென்ட் இந்தியாவை விமர்சிப்பது இது முதல்முறையல்ல. கடந்த வாரம் அளித்த ஒரு...
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதிபர் ட்ரம்ப் மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளிட்டபிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று...
ரஷ்​யா- உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி முக்​கிய பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். இதன் ஒரு பகு​தி​யாக கடந்த 15-ம் தேதி அதிபர் ட்ரம்​பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும்...
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர் சையத் அசிம் முனீர் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டி.சியில், டம்பாவில் பாகிஸ்தானின் கவுரவ தூதர் அட்னான் ஆசாத் நடத்திய கருப்பு-டை இரவு விருந்தில் பங்கேற்ற அசிம்...
அமெரிக்க அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இதையடுத்​து, போரை நிறுத்த ரஷ்​யா​வுக்கு 50 நாள் காலக்​கெடு விதித்​தார் ட்ரம்ப். பின்​னர் இதை 12 நாட்​களாக குறைத்​தார். இதுகுறித்து ரஷ்ய முன்​னாள் அதிபரும் அந்​நாட்டு பாது​காப்பு கவுன்​சிலின் துணைத் தலை​வரு​மான டிமிட்ரி மெட்​வ​தேவ் எக்ஸ் தளத்​தில், “ட்​ரம்​பின்...
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது அந்நாட்டு அரசு. இந்திய அரசும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இதனால் பாகிஸ்தானுக்கு சுமார் 1,240 கோடி ரூபாய் இழப்பு...