Google search engine
தென் ஆப்​பிரிக்​கா​வில் இம்​மாதம் நடை​பெறு​வுள்ள ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்​க​ மாட்​டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி​யுள்​ளார். அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணத்​தில் உள்ள மியாமி நகரில் நேற்று முன்​தினம் நடை​பெறற அமெரிக்க வர்த்தக கூட்​டமைப்பு கூட்​டத்​தில் அதிபர் ட்ரம்ப் பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: தென் ஆப்​பிரிக்​கா​வில் ஜி20 மாநாடு நடை​பெறவுள்​ளது. இந்த அமைப்​பில் தென் ஆப்​பிரிக்கா இருக்​கக் கூடாது. ஏனென்​றால் அங்கு நடை​பெறும் விஷ​யங்​கள் மிக மோச​மான​தாக...
சீக்​கிய மதத்தை நிறு​விய குரு​நானக் தேவ் பிறந்த இடமான நான்​கானா சாகிப், பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் உள்​ளது. குரு​நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சுமார் 2,100 பக்​தர்​கள் பாகிஸ்​தான் செல்ல மத்​திய உள்​துறை அமைச்​சகம் அனு​மதி வழங்​கி​யிருந்​தது. இவர்​கள் அனை​வருக்​கும் பாகிஸ்​தான் அரசு பயண ஆவணங்​களை வழங்​கியது. இவர்​களில் 1,900 பேர் நேற்று வாகா எல்லை வழி​யாக பாகிஸ்​தான் சென்​றனர். கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்​தூர், ராணுவ மோதலுக்கு பிறகு இரு...
 ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் 20 மாதங்களுக்கு முன்பாக பிரம்மாண்ட இந்துக் கோயில் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு கலாச்சார அடையாளமாக அபுதாபியில் இந்திய இல்லம் அமைக்கப்பட உள்ளது. கலை மற்றும் கலாச்சாரத்தில் உறவுகளை வலுப்படுத்துதல், மாணவர் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு வரலாற்றை முன்னிலைப்படுத்துவதற்கான மையமாக இது செயல்படும். மேலும், இது யோகா பயிற்சி மையமாகவும் செயல்பட உள்ளது. மேலும், உலகளவில் பிரபலமான...
அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தலில் ஜனநாயக கட்சி வேட்​பாள​ரும், இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி வெற்றி பெற்​றார். அமெரிக்​கா​வின் மிக முக்​கிய​மான நகரங்​களில் நியூ​யார்க் நகர​மும் ஒன்​று. இங்கு நடை​பெற்ற மேயர் தேர்​தலில் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்​தானி போட்​டி​யிட்​டார். இவரது தாய் மீரா நாயர் இந்​தி​யா​வைச் சேர்ந்த சினிமா தயாரிப்​பாளர். தந்தை மகமூத் மம்​தானி உகாண்​டாவைச் சேர்ந்​தவர். ஜோரான் மம்​தானிக்கு 7 வயது இருக்​கும்​போதே...
விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான். இத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான ‘மனிதாபிமான நெருக்கடி’ கொண்ட நாடாக அதை மாற்றியுள்ளது. ‘ரத்தம் குடிக்கும் அதிகாரப் பசி’ - சூடானில் உள்நாட்டுப் போர் தொடங்கி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. சூடான் தேசிய ராணுவத்துக்கும்,...
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இது குறித்து பாகிஸ்தானின் ஜியோ செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவாஜா ஆசிப், "ஆப்கனிஸ்தானை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பொம்மலாட்டத்தில் பொம்மைகளை பின்னால் இருப்பவர்கள் இயக்குவதுபோல, ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது. இந்தியா சொல்படி பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கனிஸ்தான் செயல்படுகிறது. ஆப்கனிஸ்தான்...
நேற்று (சனிக்கிழமை) மாலை லண்டன் செல்லும் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டான்காஸ்டரிலிருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு பீட்டர்பரோ நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே...
சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணம் ஹார்​பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி ஹாட்​பாட் குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீட்​டர் விட்​ட​முள்ள ஒரு வட்ட வடிவ தொட்​டி​யில் வெந்​நீர் நிரப்​பப்​பட்​டுள்​ளது. அது பார்​வை​யாளர்​களைக் கவர்​கிறது. ஒரு பிரிவு சிவப்​பாக​வும், மற்​றொரு பிரிவு வெள்ளை நிறத்​தி​லும் உள்​ளது அந்த தொட்​டி​யில் சிவப்​புப் பக்​கம் உள்ள தண்​ணீரில் மிள​காய், கத்​தரிக்​காய், முட்​டைக்​கோஸ் ஆகியவை நிரப்​பப்​பட்​டுள்​ளன. வெள்ளை பக்​கம்...
தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி...
“இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதாலேயே இருநாடுகளும் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும், மீண்டும் தெரிவித்து வருகிறார். இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்துவிட்டது....