“ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உதவாவிடில் நேட்டோ அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தை சந்திக்கும்” – ட்ரம்ப் எச்சரிக்கை
admin - 0
உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத் தவறினால், அந்த அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும் என்று டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டியில், “உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் இந்த முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதற்கு கூட்டு முயற்சி...
கட்டிடங்களையும் கப்பல்களையும் ஈரான் ராணுவம் அழிப்பது போல செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் ஈரான் பொய் தகவல்களை பரப்பி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28-ம் தேதி தாக்குதல்களை தொடங்கின. இதில், அந்த நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி உட்பட பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி...
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் போர் தொடுத்து அரை மாத காலம் கடந்துவிட்டது. ஈரானுக்கு ஆதரவு என்ற பெயரில் லெபனானும், அமெரிக்காவுக்கு ஆதரவு என்ற பெயரில் வளைகுடா நாடுகளும் அன்றாடம் அடிவாங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் (GCC) கூட்டமைப்பின் அமைதியானது வியக்கவைக்கிறது.
இந்தப் புவி அரசியல் ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டதால் உலகளவில் எரிவாயு பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்க, ஈரான்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏறத்தாழ 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் சுமார் 250 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் திங்கட்கிழமை (மார்ச் 16) இரவு நடந்ததாக ஆப்கன் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியிலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியிலும் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அவர்...
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை நடந்த ட்ரோன் தாக்குதலில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
துபாயில் அமைந்துள்ள உலகின் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையத்தின் அருகே நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்க துபாய் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து துபாய்...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று கூறினார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த 30 நிமிட விரிவான தொலைபேசிப் பேட்டியில், "ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது; ஆனால் அதன் விதிமுறைகள் இன்னும்...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.
அரபிக்கடலில் பெர்சியன் வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இந்த ஜலசந்தி ஈரான் கடல் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆசிய நாடுகளுக்கான 85 சதவீத கச்சா எண்ணெய், சமையல் காஸ் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
அமெரிக்கா உடனான போர் காரணமாக இந்த ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தாரை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசுவில் அந்த நாட்டின் ராணுவ தளம் உள்ளது. அங்கு ஏவுகணைகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைத் தொடர்ந்து சிராசுவில் உள்ள...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தேடிச் சென்று கொல்வோம்: ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை சபதம்
admin - 0
மத்திய கிழக்கு நாடுகளில் 2 வாரங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சில நாட்களாக பொதுவெளியில் காணப்படவில்லை என்று தகவல் பரவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குழந்தைகளைக் கொல்லும் இந்தக் குற்றவாளி (நெதன்யாகு) உயிரோடு இருந்தால், எங்களது முழு பலத்தையும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்வோம்” என கூறப்பட்டுள்ளது.
மார்ச் 12ம்...
ஆப்கனில் உள்ள ராணுவ மையம், சுரங்கம் மீது தாக்குதல் நடத்தினோம்: பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தகவல்
admin - 0
பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத சம்பவங்களுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான்கள் தான் காரணம் என்றும் இவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆனால் இதை ஆப்கானிஸ்தான் மறுக்கிறது. இந்த விவகாரம் காரணமாக பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கடந்த சில வாரங்களாக மோதல் நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட 3 இடங்கள் மீது ஆப்கானிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அவற்றை பாகிஸ்தான்...










