“ஈரான் புதிய உச்ச தலைவர் உயிருடன் இல்லை என தகவல் கிடைத்துள்ளது” – ட்ரம்ப்

0
109

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது” என்று கூறினார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த 30 நிமிட விரிவான தொலைபேசிப் பேட்டியில், “ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது; ஆனால் அதன் விதிமுறைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால், நான் அந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்பவில்லை. மேலும், எதிர்காலத்தில் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் மிகவும் உறுதியானதாக இருக்க வேண்டும்.

அமைதி ஒப்பந்தத்திற்கான அந்த குறிப்பிட்ட நிபந்தனைகள் குறித்து நான் உங்களிடம் கூற விரும்பவில்லை. இருப்பினும், ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாகக் கைவிடுவது அந்த ஒப்பந்தத்தின் முதன்மையான அங்கமாக இருக்கும்.

ஈரானில் சமீபத்தில் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா காமேனி உயிருடன் இருக்கிறாரா என்பதே எனக்குத் தெரியவில்லை. இதுவரை, அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவரின் மரணம் குறித்த செய்திகள் தற்போது வெறும் வதந்தி மட்டுமே. அவர் உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல்கள் வருகின்றன. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால், அவர் தனது நாட்டிற்காக மிகவும் புத்திசாலித்தனமான ஒன்றைச் செய்ய வேண்டும்; அதுதான் ‘சரணடைவது'” என்று கூறினார்.

மேலும், “ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவின் மீது அமெரிக்கப் படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த நடவடிக்கை தீவை முற்றிலும் அழித்துவிட்டது. வேடிக்கைக்காக நாங்கள் அதை இன்னும் சில முறை தாக்கலாம். தற்போதைய சூழலில் ஈரானின் ராணுவத் திறன்கள் இன்னும் இரண்டு நாட்களுக்குள் முற்றிலும் அழிக்கப்படும்.

உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பை எதிர்த்துப் போராட, ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க ஒரு சர்வதேச கூட்டணியை ஒருங்கிணைந்து வருகிறேன். ஈரானின் குண்டர்களால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஹார்முஸ் நீர்வழிப் பாதையில் போர்க்கப்பல்களை நிலைநிறுத்த அழைப்பு விடுத்துள்ளேன்.

அமெரிக்கப் படைகளின் இருப்பிடம் குறித்து ஈரானுக்கு ரஷ்யா உளவுத்துறை ஒருவேளை தகவல்களை வழங்கலாம் அல்லது வழங்காமலும் இருக்கலாம். ஈரான் மீண்டும் ஒருபோதும் மத்திய கிழக்கின் கொடுமைக்காரனாக மாற முடியாது என்பதை உறுதி செய்வதே எனது ஒரே நோக்கம்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here