அதிகம் வளருவோம், அதிகம் சாதிப்போம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் மிக விரைவாக வளர்ந்த வல்லரசு நாடாக இந்தியா மாறுவதற்கு உழைத்து வருகிறோம் என இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் 8-ம் தேதி ஆஸ்திரேலியா வந்தடைந்தார். மெல்போர்னில் அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ், கவர்னர் ஜெனரல் சாம்...
துருக்கியில் நேட்டோ உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய அதிபர் ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு ஏற்பட்ட மோதலில் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இது அணு ஆயுத போராக மாறும் நிலை ஏற்பட்டது. போரை நான்தான் தடுத்து நிறுத்தினேன். இந்த மோதலை நிறுத்தியதன் மூலம் 3 கோடி முதல் 5 கோடி மக்களின் உயிரைக்...
ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அண்மையில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இரண்டு நாள் வான்வழித் தாக்குதல்களில் ஈரானில்...
அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள், 14 மாத பேத்தி ஆகியோரும்...
“ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெறுகிறது. அவர்கள் பொய்யர்கள். அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் இணைந்து டொனால்டு டரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னை பொறுத்தவரை நிறைவுற்றது....
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்து ஒரு பேரல் விலை 74.5 டாலராக விற்பனையாகி வருகிறது.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே செய்தியாளர்களை சந்தித்த டொனால்டு டரம்ப், “என்னை பொறுத்தவரை ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவுற்றது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட...
ஈரான் மீது இன்று இரவும் கடுமையான தாக்குதல் நடத்துவோம். கார்க் தீவை நாங்கள் கைப்பற்ற வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நிறைவுற்றதாக ட்ரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஈரான் மீது நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக...
ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் – போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்
admin - 0
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள் மீது ஈரான் திடீரென தாக்குதல் நடத்தியதால், அந்த நாட்டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. ‘‘ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீணானது’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்தம்...
காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடா குடியுரிமை பெற்று அந்நாட்டில் வசித்து வந்தார். தடை செய்யப்பட்ட காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் என்ற அமைப்பின் தலைவராக இருந்த நிஜ்ஜார் தீவிரவாதி என கடந்த 2020-ல் இந்தியா அறிவித்தது.
இந்நிலையில் கடந்த 2023 ஜூனில் கனடாவின் சர்ரே நகரில் முகமூடி அணிந்த இருவரால் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...
இந்தோனேசியாவில் ஐஐஎம் (பெங்களூரு) வளாகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அத்துடன், பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), விண்வெளித் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்குப் பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமான நிலையத்தில்...









