ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு 20% கட்டண அறிவிப்பு வாபஸ்: ஒரே நாளில் முடிவை மாற்றிய ட்ரம்ப்
admin - 0
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிக கப்பல்களுக்கு 20 சதவீத பாதுகாப்புக் கட்டணம் விதிக்கப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார். இந்த நீர்வழிப்பாதையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள உடன்பட்டுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அவர் அறிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “மத்திய கிழக்கு...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்
admin - 0
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக ஈரான் தூதரக அதிகாரிகளை நேரில் வரவழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. பல்வேறு நாடுகளின் சமரசத்தால் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இரு...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மோதல்: பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
admin - 0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அப்போது இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இது, பாகிஸ்தான் அரசுக்கு எதிரான...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா நேற்று வெற்றிகரமாக அனுப்பியது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகியவை இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன், ரஷ்யாவின் சோயூஸ் விண்கலங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்கின்றனர். பொதுவாக...
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே இல்லை. ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என்று ஹார்வார்டு பல்கலைக்கழகமே கொண்டாடும் பெண்ணாக சப்ரினா கோன்சலேஸ் பாஸ்டர்ஸ்கி உருவெடுத்துள்ளார்.
14 வயதில் தனக்கான விமானத்தை தானே தயாரித்து, அதில் பறந்து காண்பித்தவர். இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங்கால் புகழப்பட்டவர். நாசா, ப்ளூ ஆரிஜின், மெட்டா, கூகுளில் இருந்து கோடிக்கணக்கான சம்பளத்தில் வந்த வேலையை உதறிவிட்டு இயற்பியலில் விடை தெரியாத...
ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இப்பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் அமெரிக்காவுக்கு, இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் அவற்றின் சரக்கு மதிப்பில் 20 சதவீதத்தை பாதுகாப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானுடன் அண்மையில் எட்டப்பட்டிருந்த தற்காலிக அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள...
தாய்லாந்தின் பாங்காக் நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் காயம் அடைந்தனர்.
தாய்லாந்து தலைநகரான பாங்காக் நகரின் சட்டுசக் பகுதியில் ‘ராங் பீர் நா லாட் ப்ராவ்’ என்ற பெயரில் பிரபல மதுபான மற்றும் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு மேடைக்கு அருகில் இருந்த மின்சாதனம் திடீரென வெடித்து தீப்பற்றியது. இதையடுத்து...
அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அதன் ராணுவ தளங்கள் மீது ஈரான் உக்கிர தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் கண்ணுக்கு கண் அதாவது ‘பழிக்குப்பழி’ வாங்கும் தனது ராணுவ நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஈரான் தனது முதற்கட்ட நடவடிக்கையில் ஜோர்டானில்...
ஹார்முஸ் ஜலசந்தியில் இரு யுஏஇ கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்
admin - 0
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. இதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஆறு பேர் இந்தியர்கள்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மோதல் மோதல் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பும் போர்நிறுத்தத்தை அறிவித்தன. தொடர்ந்து கடந்த மாதம் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை...
வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து: 10 தமிழர் உட்பட 15 இந்தியர் உயிரிழப்பு – என்ன நடந்தது?
admin - 0
வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். செல்போன் நிறுவனம் தனது விநியோகஸ்தர்களை சிறப்பு சுற்றுலா அழைத்துச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் அன்ஜியாங் மாகாணத்தில் பூகுவோக் தீவு அமைந்துள்ளது. இந்தியாவில் இருந்து 32 சுற்றுலா பயணிகள் சில நாட்களுக்கு முன்பு இந்த தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்....









