ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மீட்க கோரி மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
admin - 0
ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலரை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த போரில் இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவில் உள்ள குடும்பத்தை சேர்ந்த திவ்யா என்பவர்...
ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சில மர்மமான வர்த்தகங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்க அரசின் முக்கியமான கொள்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே, சந்தையில் பெரும் முதலீடுகள் செய்யப்படும் போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா மீதான தாக்குதல், ஈரான் மீதான தாக்குதல், அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சில...
“ஒரு முழுமையான உடன்பாடு எட்டப்படும் வரை…!” – போர் நிறுத்தத்துக்கு ஊடே ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
admin - 0
“ஒரு முழுமையான, இறுதியான உடன்பாடு எட்டப்படும் வரை அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலை கொண்டிருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பதிவில், “ஏற்கெனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை கொன்று குவிப்பதற்கும் அழிப்பதற்கும் அவசியமான அமெரிக்காவின் அனைத்து போர்...
ஹார்முஸ் ஜலசந்தியின் பிரதானப் கப்பல் வழித்தடத்தில் கடல் கண்ணிவெடிகள் இருக்கும் ஆபத்தைக் காரணம் காட்டி, ஹார்முஸ் வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை ஈரான் ராணுவம் அறிவித்தது.
கடல் கண்ணிவெடிகளின் அபாயம் காரணமாக கப்பல்கள் பிரதான வழித்தடத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.
உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கினை வகிக்கும் மிக முக்கிய நீர்வழிப்...
“நாம் இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன. அதனை இஸ்ரேல் ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது சண்டையிட்டோ அடையும்” என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலியர்களின் மன உறுதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் அற்புதமான மக்களே, உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான தங்குமிடங்களில் நீங்கள் மன உறுதியைக்...
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இது அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புடைய ‘இஸ்னா’ மற்றும் ‘தஸ்னிம்’ ஆகிய செய்தி நிறுவனங்கள் கடல் கண்ணிவெடிகள் தொடர்பான வரைபடத்தை நேற்று வெளியிட்டன. பாரசீக வளைகுடாவின் குறுகிய நுழைவுப்...
போர் நிறுத்தத்துக்கு நடுவே லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
admin - 0
ஈரானும், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை அறிவித்தபின், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை ஏவி 254 பேரை கொன்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளது. இதனால் சண்டை நிறுத்தத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
போர் காரணமாக மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கெடு கடந்த திங்கள்...
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போர், இன்று முதல் இரண்டு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து, இந்த போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும்...
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில் 89 பேர் கொல்லப்பட்டனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் முன்னிலையில் இரண்டு வார காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா...
ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தத்துக்கு இந்தியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின்...










