மாணவர் போராட்டத்தின்போது வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் ஹேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி டாக்காவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதுமுதல்...
இயற்கையின் சமநிலை குலையும்போது, அதன் முதல் பலியே மனித குலம்தான் என்பதற்கு இலங்கையில் நிலவும் தற்போதைய வறட்சியே சாட்சி. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ‘சூப்பர் எல்-நினோ’ காலநிலை மாற்றம், பல ஆயிரம் மைல்கள் தள்ளியிருக்கும் ஒரு குட்டித் தீவில் வாழும் மக்களைத் தண்ணீருக்கு தவிக்க விடும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு சொட்டுத் தண்ணீருக்காக மைல் கணக்கில் நடக்கும் கால்கள், வறண்டுபோன குளத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடும் விவசாயிகள்,...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​ஸி​யிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்​தார். இவரும், நேபாளத்​தைச் சேர்ந்த இவரது நண்​பர் நவம்கவுலும் இங்​குள்ள ரட்​கர்ஸ் பல்​கலைக்​கழகத்​தில் பட்​டப்​படிப்பு படித்​து​விட்டு அமெரிக்​கா​விலேயே தங்கி வேலை பார்த்து வந்​தனர். இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரு​வரும் லோயர் மன்​ஹாட்​டன் சப்வே ரயில் நிலை​யத்​துக்கு சென்​றுள்​ளனர். ரயில்வே தண்​ட​வாளத்​தைக் கடக்க முயன்​ற​போது இரு​வரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அணு ஆயுத பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூட்டுப் பிரகடனத்தில் இடம்பெற்றன. இந்தப் பிரகடனத்துக்கு மாநாட்டின் கடைசி நாளான நேற்று ஒப்புதல் வழங்கப்பட்டது. 2027-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை சீனா ஏற்க உள்ளது....
நேபாள வெள்ளத்தில் மாயமான 77 பக்தர்கள், 3 தன்னார்வலர்கள் என மொத்தம் 80 பேரைத் தேடும் பணி 2 வாரங்களாகத் தொடர்கிறது என கோவை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய கோவை ஈஷா மையத்தைச் சேர்ந்த 80 பேரைக் கண்டறியும் பணிகள் தொடர்கின்றன. மீட்பு மற்றும் தடயவியல் பணிகள் நடப்பதால், சீன-நேபாள எல்லைப் பகுதிகளில் இரு நாட்டு அரசுகளும்...
உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வருவதற்​கான அமை​திப் பேச்​சு​வார்த்​தைக்கு உதவி செய்​யத் தயா​ராக இருப்​ப​தாக பிரதமர் நரேந்​திர மோடி​யும், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக​வும், அதனை அதிபர் விளா​டி​மிர் புதின் வரவேற்​றுள்​ள​தாக​வும் ரஷ்யா தெரி​வித்​துள்​ளது. டெல்​லி​யில் பிரிக்ஸ் மாநாட்​டின் போது ரஷ்ய செய்​தித் தொடர்​பாளர் திமித்ரி பெஸ்​கோவ் கூறிய​தாவது: உக்​ரைன் போரை முடிவுக்​குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்​கொண்டு வரும் முயற்​சிகளுக்கு இது​வரை...
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கும் மற்றும் எரிபொருள் விநியோகத்துக்கும் அமெரிக்கப் படைகள் வழங்கி வரும் பாதுகாப்புக்கான செலவை பயனடையும் பிற நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா பல தலைமுறைகளாகத் தனது சொந்த நலனை விட பிற நாடுகளின் நலனுக்காகவே ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பை வழங்கி...
“இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எந்தவொரு நாட்டின் அழுத்தத்துக்கும் கட்டுப்பட்டதல்ல. அது, 140 கோடி இந்தியர்களின் நலனை மட்டுமே சார்ந்தது.” - இந்த ஒற்றை வரியில்தான் தற்போதைய இந்தியாவின் உலக அரசியல் இயங்குகிறது. டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் மாநாடு வெறும் தலைவர்கள் சந்திக்கும் களமல்ல. வல்லரசுகளின் பிடியில் சிக்காமல் சொந்த பாதையை வகுக்கும் இந்தியாவின் வல்லமையை வெளிப்படுத்தும் மேடையாகும். ரஷ்யாவின் மலிவான கச்சா எண்ணெய், அமெரிக்காவின் பாதுகாப்புத் தொழில்நுட்ப உதவி, சீனாவின்...
வங்க தேசத்​தில் கடந்த 2 ஆண்​டு​களுக்​கும் மேல் சிறையில் அடைக்​கப்​பட்​டுள்ள இந்து மத குரு சின்மயி கிருஷ்ண தாஸுக்​கு, அவரது தாயாரின் இறு​திச் சடங்​கில் பங்​கேற்​ப​தற்​காக 5 மணி நேரம் மட்​டும் பரோல் வழங்​கப்​பட்​டது. வங்​கதேச சம்​மிலித சனாதனி ஜாகரன் ஜோத் அமைப்​பின் செய்தித் தொடர்​பாள​ரான சின்​மயி கிருஷ்ண தாஸ், 2024-ம் ஆண்டு நவம்​பர் மாதம் தேசத்​துரோகக் குற்​றச்​சாட்​டின் கீழ் கைது செய்யப்​பட்​டார். இந்த நிலை​யில், சின்​மயி கிருஷ்ண தாஸின்...
டெல்லியில் செப்​டம்​பர் 12, 13-ல் நடக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டிற்கு வங்​கதேச பிரதமருக்​குத் தனிப்​பட்ட முறையில் அழைப்பு வரவில்​லை. பிம்​ஸ்​டெக் அமைப்​பின் தலை​வ​ராகவே அவருக்கு அழைப்பு வந்துள்​ளது என்று வங்​கதேச வெளி​யுறவு அமைச்​சர் ஹுமாயூன் கபீர் கூறி​யுள்​ளார். இதனால், பிரதமர் தா​ரிக் ரஹ்​மான் இம்​மா​நாட்​டில் பங்கேற்க மாட்​டார் என்​றும், அவருக்​குப் பதிலாக வேறொரு அரசு பிர​தி​நிதி கலந்​து​கொள்ள வாய்ப்​புள்​ள​தாக​வும் அவர் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். “நமது பிரதமருக்கு நேரடி அழைப்​பில்​லை. மேலும், அவரது முதல்...