18 வயதில் உலகின் இளம் பேராசிரியராக மாறி சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர்.
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் நாதன் தாமஸ். இவர் 18 ஆண்டு 346 நாட்களில் உலகின் மிக இளம்வயது பேராசிரியர் என்ற சாதனையைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், 306 ஆண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்குமுன், 1717-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் பேராசிரியர் பதவியேற்று ஸ்காட்லாந்து கணிதவியலாளர் கோலின் மெக்லாரின் மிக இளம்வயது...
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முயற்சி மேற்கொண்டு வருகிறார். போர் நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகிய வளங்கள் ஆகும்.
எனவே, ரஷ்யாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷ்யாவுக்கு போர் நடத்தத் தேவையான நிதி கிடைக்காது என்று அதிபர் ட்ரம்ப் நினைத்தார். இதையடுத்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன்,...
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக பேரணி: பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு
admin - 0
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான பேரணியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, நிர்வாக அலட்சியம், சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் பாகுபாடு மற்றும் அத்துமீறல்களுக்கு எதிராக, கடந்த மாதம் முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்குமாறு கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜேஏஏசி)...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் உள்ள காரகோரம் மலைத்தொடரில், உலகின் 12-வது மிக உயர்ந்த சிகரமான ‘பிராட் பீக்’ அமைந்துள்ளது.
புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரரான நிர்மல் ‘நிம்ஸ்’ புர்ஜா உள்ளிட்ட 6 பேர் அடங்கிய குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த மேற்குப் பகுதி பாதையில், சுமார் 21,600 முதல் 21,850 அடி உயரத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது....
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினர். தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 27, ஆக.2-ம் தேதிகளில் இரு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.
வரும் 10-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற...
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஸ்பெயின் அரசு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
2021-ம் ஆண்டில் இதேபோன்ற அகதிகள் ஊடுருவலை ஸ்பெயின் அரசு சந்தித்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத இந்த அளவு அகதிகளின் சட்டவிரோத வருகையைப் பார்த்து திகைத்து நிற்கிறது. இதனால்,...
ஸ்பெயினுக்குள் ஊடுருவிய அகதிகள் உணவு இல்லாமல் மீண்டும் சொந்த நாடான மொராக்கோவுக்கு திரும்பி உள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள ஸ்பெயினும், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொராக்கோவும் அண்டை நாடுகளாக உள்ளன. முஸ்லிம் நாடான மொராக்கோவில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மொராக்கோ மக்கள், வளமான ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களில் மொராக்கோவை சேர்ந்த சுமார் 9,000...
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணியின் போது நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 5 காவலர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஸ்வாத் மாவட்டத்தில் உள்ள கபல் காவல் நிலையம் அருகே ஸ்வாத் அமைதி ஜிர்கா என்ற உள்ளூர் அமைப்பு சார்பில் தீவிரவாதத்திதுக்கு எதிராக அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தீவிரவாதத்திதுக்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றபோது, காவல் நிலையம்...
மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த ஏப்.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற சில சரக்கு கப்பல்கள் மீது...
சீனாவின் பல துறைகளிலும் இந்தியர்கள் கனிசமாக பணியாற்றுகின்றனர். இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்க, தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் முதல் முறையாக ‘திறந்த வெளி’ ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஆலோசகர்கள் நிதின் ஜீத் சிங் மற்றும் ரமேஷ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியர்களிடம் கருத்து கேட்டனர். இதில் பங்கேற்ற இந்தியர்கள் கூறியதாவது: சீன...









