ரஷ்யாவின் மத்தியப் பகுதியான தாதர்ஸ்தான் பிராந்தியத்தின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிஷ்னெகாம்ஸ்க் என்ற தொழில் நகரத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 75 பேரில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாதர்ஸ்தான்...
கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொலம்பியாவின் சோகோ மாகாணம், சான் ஹோசே டெல் பால்மர் நகரை மையமாகக் கொண்டு நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.4 ஆகப் பதிவானது.
இந்த பூகம்பகத்தால் சான் ஹோசே டெல் பால்மர், கலி, பெரேரா, மனிசாலெஸ் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான...
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் காரி சயீத் அப்துல் அஜீஸ். ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் லஷ்கர் அமைப்பின் துறைக்கு காரி சயீத் பொறுப்பாளராக இருந்தார்.
இவர் இஸ்லாமாபாத்தில் உள்ள குபா மசூதிக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மசூதியின் நுழைவாயிலில் திடீரென சரிந்து...
பாகிஸ்தான் முழுவதும் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.1,800-க்கு (இந்திய ரூபாயில் 616.71) விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதே அளவு கோதுமை மாவு ரூ.3,200-க்கு (இந்திய ரூபாயில் 1,096.38) விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எண்ணெய், மளிகை பொருட்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளன. ஒரு வாரத்தில் மட்டும் உணவு பொருட்களின் விலை 10% வரை உயர்ந்திருக்கிறது.
இதேபோல பாகிஸ்தானில் பெட்ரோல்,...
அமெரிக்க செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்: இந்திய பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்க வாய்ப்பு
admin - 0
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்க அதிகாரம் அளிக்கும் புதிய தடைகள் மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவுக்கு லிண்ட்சே ஓ.கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026 என்று பெயரிடப்பட்டுள்ளது....
ரஷ்ய செய்தி நிறுவனமான ‘டாஸ்’-க்கு ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்னுலின் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் மற்றும் பாஸ்பரஸ் ஜலசந்திப் பகுதிகளில் அதிகரித்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள மாற்றுப் போக்குவரத்து வழித்தடங்கள் அவசியமாகின்றன. இதற்காகத் துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலை அடையும் வகையில் ரயில் பாதையை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு நேரடியாகப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் எந்தவொரு திட்டமும் ஏற்கத்தக்கதே. இத்திட்டம்...
கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு 7 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த அவரது காதலனை, சர்வதேச காவல் அமைப்புகளின் உதவியுடன் டொராண்டோ காவல் துறையினர் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கனடாவின் டொராண்டோவில் வசித்து வந்த 30 வயதான இமான்ஷி குரானா என்ற இந்தியப் பெண், கடந்த 2025 டிசம்பர் 19 இரவில் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, காவல் துறை அவரைத் தீவிரமாகத் தேடத் தொடங்கியது.மறுநாள் காலை அப்பகுதியில்...
பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் இடையே நேற்று முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான், சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி எதிரி நாடுகளால் சவுதி அரேபியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை பயன்படுத்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டு...
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியுடன் மோதல் இல்லை என்று அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ் தபா காமேனி புதிய உச்ச தலைவராக பதவியேற்றார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலில் மொஜ்தபாவும் படுகாயம் அடைந்தார்....
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக்கோரி, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பல்வேறு வழக்குகளில் கடந்த 2023, ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரை விடுவிக்கக்கோரி, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பிடிஐ...









