கொலம்பியா பூகம்ப உயிரிழப்பு 132 ஆக அதிகரிப்பு – 2,000 பேர் மாயம்

0
23

கொலம்​பி​யா​வில் நேற்று சக்​தி​வாய்ந்த பூகம்​பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கொலம்​பி​யா​வின் சோகோ மாகாணம், சான் ஹோசே டெல் பால்மர் நகரை மைய​மாகக் கொண்டு நேற்று சக்​தி​வாய்ந்த பூகம்பம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அலகில் 7.4 ஆகப் பதி​வானது.

இந்த பூகம்​பகத்​தால் சான் ஹோசே டெல் பால்​மர், கலி, பெரே​ரா, மனி​சாலெஸ் உள்​ளிட்ட நகரங்​களில் ஏராள​மான கட்​டிடங்​கள் இடிந்து விழுந்​தன. இதில் இதுவரை சுமார் 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 570 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். கட்​டிட இடிபாடுகளில் ஆயிரக்​கணக்​கானோர் சிக்கி உள்​ளனர். அவர்​களை மீட்க ராணுவ வீரர்​கள் களமிறக்​கப்​பட்டு உள்​ளனர். அங்கு மீட்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.

கொலம்​பியா அதிபர் அபெலார்டோ கூறும்​போது, “பூகம்​பம் நேரிட்ட சான் ஹோசே டெல் பால்​மர் நகரில் ஒருங்​கிணைந்த கட்​டுப்​பாட்டு மையம் அமைக்​கப்​பட்டு உள்​ளது. கொலம்​பிய ராணுவம் மற்​றும் தேசிய பேரிடர் மீட்​புப் படை வீரர்​கள் மீட்​புப் பணி​யில் ஈடுபட்டு உள்​ளனர். மாகாண அரசுக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் கொலம்​பிய அரசு வழங்​கும்” என்று தெரிவித்துள்ளார். அந்நாட்டில் இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ள நிலையில் அவசர நிலையை அவர் பிறப்பித்துள்ளார்.

பூகம்பத்தால் சேதமடைந்த கட்டிடங்களில் கலி நகரத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றும் அடங்கியுள்ளதாக தகவல். அதில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது மீட்பு பணி நடந்து வருகிறது. அந்த கட்டியிடம் சுமார் 30 சதவீதம் சேதமடைந்துள்ளது. அங்கு சிகிச்சை பெற்றவர்களின் நிலை குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை.

கடும் பாதிப்படைந்த பெரே​ரா நகர்

கொலம்பியாவின் பெரே​ரா நகரில் சுமார் 5 லட்சம் மக்கள் வசித்து வந்த நிலையில் அங்கு பூகம்பத்தின் பாதிப்பு மிக தீவிரமாக ஏற்பட்டுள்ளதாக கொலம்பிய தலைநகரங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த நகரில் மட்டும் சுமார் 64 பேர் பூகம்பத்தால் உயிரிழந்தனர்.

இதேபோல மாயமான 2,000 பேரில் பெரே​ரா மற்றும் கலி நகரை சேர்ந்தவர்களே அதிகம் என களத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

கட்டிடங்கள் சேதம்

கொலம்​பிய அதிபர் அபெலார்டோ தெரிவித்த தகவலின் படி சுமார் 1,577 கட்டிடங்கள் இந்த பூகம்பத்தில் சேதமடைந்துள்ளதாக தகவல். அதில் 18 சுகாதார மையங்கள், 52 பள்ளிகள் அடங்கும். 37 கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்தன, 60 கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. மற்ற கட்டிடங்கள் பகுதி அளவில் சேதமடைந்ததாக களத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

இந்த பூகம்பம் உள்நாட்டு நேரப்படி காலை 7.34 மணிக்கு ஏற்பட்டுள்ளது. கொலம்பியாவின் சான் ஹோசே டெல் பால்​மர் பகுதிக்கு அருகே, சுமார் 107 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இது தலைநகர் பகோடாவில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பூகம்பம் காரணமாக கொலம்பியாவின் மேற்கு பகுதியில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு செயல்படும் பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சில விமான நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுகிறது.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் அந்நாட்டு விமானப்படை களத்தில் இறங்கி உள்ளது. மேலும், விமான நிலைய கட்டிடங்களில் பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா உதவி

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியாவுக்கு அமெரிக்க அரசு சுமார் 15.5 மில்லியன் டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான முகாம், உணவு, மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவற்றை பெற கொலம்பியாவுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் தேசம்

பூகோள ரீதியாக கொலம்பியா அமைந்துள்ள பகுதியில் நிலநடுக்கம் அதிகம் உணரப்படும். மாதந்தோறும் அங்கு லேசான அளவில் நிலநடுக்கம் உணரப்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட பூகம்பத்துக்கு பின்னரும் அந்நாட்டு புவியியல் சேவை மையம் நிலநடுக்க எச்சரிக்கையை விடுத்திருந்தது.

கடந்த 1999-ல் அந்நாட்டின் ஆர்மீனியா மற்றும் பெரே​ரா பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here