ஜார்க்கண்ட் சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

0
28

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்​சி​யில் நேற்று சட்​டப்​பேரவை நோக்கி பேரணி​யாக சென்ற மாணவ, மாண​வியர் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். இதில் பலர் காயமடைந்​தனர்.

ஜார்க்​கண்ட் அரசு பணி​யாளர் தேர்​வாணைய முறை​கேடு தொடர்பாக கடந்த ஜூலை 25-ம் தேதி தலைநகர் ராஞ்​சி​யில் மாணவ, மாண​வியர் உண்​ணா​விரத போராட்​டத்தை தொடங்கினர். மாணவர் சங்​கத்​தின் மூத்த தலை​வர்​கள் தேவேந்​திர நாத் மஹதோ (33), ராகுல் கிராந்தி (40), ரூபேஷ் குமார் பால் (30), சவிதா குமாரி (28), ஹபிபா (27) ஆகியோர் போராட்​டத்தை முன்​னின்று நடத்தி வரு​கின்​றனர். இவர்​கள் 5 பேரும் தொடர் உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருக்​கும் மாணவர் சங்​கப் பிரதிநிதிகளுடன் ஆளும் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா அரசு 6 சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்தி உள்​ளது. ஆனால் இது​வரை உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. மாணவர்​களை சமா​தானப்​படுத்த ஜார்க்​கண்ட் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்தை சேர்ந்த சிலர் பணி நீக்​கம் செய்​யப்​பட்டு உள்​ளனர்.

குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் மீது வழக்​கு​களும் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. இந்த சூழலில் ஜார்க்​கண்ட் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் முன்​னாள் தலை​வர் கியாங்டே நேற்று கைது செய்​யப்​பட்​டார். தற்​போது ஜார்க்​கண்ட் சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்​டத் தொடர் நடை​பெற்று கொண்​டிருக்​கிறது. ஆயிரக்​கணக்​கான மாணவர்​கள் ராஞ்​சி​யில் நேற்று சட்​டப்​பேரவை நோக்கி பேரணி​யாக சென்​றனர். போலீஸ் தடுப்​பு​களை தாண்டி அவர்​கள் சட்​டசபை வளாகத்​திற்​குள் முன்​னேறினர். அப்போது சிலர் போலீ​ஸார் மீது பாட்​டில்​கள், காலணி​களை வீசினர்.

மாணவர்​களை தடுத்து நிறுத்த போலீ​ஸார் முதலில் தண்​ணீரை பீய்ச்சி அடித்​தனர். ஆனால் அவர்​கள் கலைந்து செல்​லாமல் நடனம் ஆடியது வியப்​பில் ஆழ்த்​தி​யது. இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். இதில் ஏராள​மான மாணவர்​கள் காயமடைந்​தனர். காவல்​துறையினர் 4 பேர் காயமடைந்​தனர்.

இதுகுறித்து மாணவர் சங்க தலை​வர் தேவேந்​திர நாத் மஹதோ கூறும்​போது, “மாணவர்​களின் போராட்​டத்தை ஒடுக்க முதல்​வர் ஹேமந்த் சோரன் தலை​மையி​லான அரசு தடியடி நடத்​துகிறது. கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசுகிறது. இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்ச மாட்​டோம். எங்​களது கோரிக்​கைகள் நிறைவேறும்​வரை போராட்​டத்தை தொடரு​வோம்” என்று தெரிவித்​தார்.

ஜார்க்​கண்ட் அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “மாணவர்​கள் தரப்பில் 6 கோரிக்​கைகள் முன்​வைக்​கப்​பட்​டன. இதில் 4 கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளன. தொடர்ந்​து் பேச்சுவார்த்தையும்​ நடத்​தப்​பட்​டு வரு​கிறது” என்​று தெரிவித்​தன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here