பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கராச்சி கால்பந்து வீரர்களிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி

0
16

பலுசிஸ்​தானில் உள்ள ஒரு நெடுஞ்​சாலை​யில், மர்ம கும்​பல் ஒன்று கராச்சி கால்​பந்து வீரர்​களிடம் துப்​பாக்கி முனை​யில் வழிப்​பறி செய்​துள்​ளது.

பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாண தலைநகர் குவெட்​டா​வில் நடை​பெறும் முதல்​வரின் தங்​கக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யில் பங்​கேற்​ப​தற்​காக கராச்சி மாவட்ட மேற்கு கால்​பந்து அணி வீரர்​கள் நேற்று முன்​தினம் பேருந்​தில் குவெட்டா நகருக்கு சென்று கொண்​டிருந்​தனர்.

பலுசிஸ்​தான் நெடுஞ்​சாலை​யில் ஆயுதம் வைத்​திருந்த ஒரு கும்​பல் பேருந்தை இடைமறித்து நிறுத்​தினர். பின்​னர் துப்​பாக்​கியைக் காட்டி மிரட்டி அவர்​களிட​மிருந்த பணம், செல்​போன்​கள், மதிப்​புமிகுந்த கருவி​கள் உள்​ளிட்ட பொருட்​களை பறித்​துச் சென்​று​விட்​டனர். முன்​ன​தாக, இதை எதிர்த்து கேள்வி கேட்ட சிலரை அவர்​கள் துப்​பாக்கி முனை​யில் அடித்​தனர்.

குவெட்டா நகரை அடைந்​ததும் கால்​பந்து அணி நிர்​வாகம் சார்​பில் இதுதொடர்​பாக போலீ​ஸில் புகார் செய்​யப்​பட்​டது. இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். பலுசிஸ்​தான் நெடுஞ்​சாலை​யில் மஸ்​துங் மாவட்​டத்​திலிருந்து குவெட்டா செல்​லும் வழி​யில் தீவிர​வாத கும்​பலைச் சேர்ந்​தவர்​கள் பயணி​களை வழிமறித்து வழிப்​பறி செய்​யும் போக்கு அதி​கரித்து வரு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here