ஈரானின் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்த ட்ரம்ப்: நவம்பரில் மீண்டும் போர் மூளும் அபாயம்

0
18

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றனர். அங்கு ஈரான் அமைச்சர் அராக்சி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரான், அமெரிக்கா இடையிலான போரை நிறுத்த 7 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை முன்மொழிந்து உள்ளோம். கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே 14 அம்ச அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அம்சங்களை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும்.

ஈரானின் நியாயமான கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் 7-வது நாளில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும். இதன்பிறகு அணுசக்தி உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று கூறும் போது, ‘‘ஈரான் அரசு ஒரு பரிந்துரையை முன்வைத்தது. அந்த பரிந்துரையை நிராகரித்து விட்டேன்’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், “வரும் நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் அமெரிக்க செனட் சபையின் 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்குப் பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் மிகப்பெரிய போர் மூளக்கூடும். ஈரானின் அமைதித் திட்டத்தை அதிபர் ட்ரம்ப் நிராகரித்துவிட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

ஈரான் சரணடையாது

ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெப்பி நேற்று கூறும்போது, “ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. எங்கள் நாட்டை குறிவைத்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றை வெற்றிகரமாக முறியடித்து உள்ளோம். எங்களது ஏவுகணைகள் அமெரிக்க ராணுவ தளங்களை தகர்க்கும் திறன் கொண்டவை” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here