ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இத்தாலி தனியார் வங்கியில் ரூ.1,034 கோடி மோசடி

0
19

 இத்தாலியின் மிகப்பெரிய தனியார் வங்கியான இன்டேசா சான் பாவ்லோவின், மற்றொரு பிரிவு ஃபிடியூரம்.

கடந்த பிப்ரவரி மாதம் ஃபிடியூரம் தலைவர் பாவ்லோ மொலேசினிக்கு, இன்டேசா சான் பாவ்லோ தலைமை செயல் அதிகாரி கார்லோ மெஸ்ஸினா அனுப்பியதாக வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி வந்துள்ளது. அதில், வெளிநாட்டில் அவசர நிதி பரிவர்த்தனை ஒன்றை மேற்கொள்ள உதவுமாறு கோரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, பிரபல சட்ட நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் பேசுவது போல ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது.

அதில் பேசிய வழக்கறிஞர், வாட்ஸ்அப் மூலம் வந்த உத்தரவு உண்மையானது என உறுதிப்படுத்தினார். இந்த தகவல்களை உண்மையானவை என நம்பிய மொலேசினி, வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்ப உத்தரவிட்டார். இதன்படி பல கட்டங்களாக மொத்தமாக 9.5 கோடி யூரோ (சுமார் ரூ.1,034 கோடி) அனுப்பப்பட்டது. அதன் பிறகே இது ஏ.ஐ. தொழில்நுட்ப மோசடி என்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here