பிரான்ஸில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர்செல்வம் - சரண்யா தம்பதியின் மகன் ப.இனியன். 6 வயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த இனியன், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் தொடங்கி சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றார். பல்வேறு சர்வதேச போட்டிகளில் பட்டம் வென்ற இனியன் 2,513 புள்ளிகள்...
புற்றுநோயால் அவதிப்படும் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ ரூ.1 கோடி உதவி
admin - 0
புற்றுநோயால் அவதிப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.1 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளது.
அன்ஷுமன் கெய்க்வாட் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரிட்டனிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்க தேவையான உதவியை பிசிசிஐ வழங்கவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வீரர் சந்திப் பாட்டீல் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில்...
கோபா அமெரிக்கா கால்பந்துத் தொடரின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கனடா அணியை உருகுவே வீழ்த்தியது. பெனால்டி ஷூட்-அவுட்டில் உருகுவே 4-3 என்ற கணக்கில் வெற்றி கண்டது.
புகழ்பெற்ற கோபா அமெரிக் காகால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு அர்ஜெண்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
இந்நிலையில், அரையிறுதியில் தோல்வி கண்ட கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நேற்று நார்த்...
நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அந்த அணி வீழ்த்தி இருந்தது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் கவனம் விளையாடின. இருந்த போதும் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. முதல் பாதி ஆட்ட நேரத்தில்...
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் சார்லோட் நகரில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோதின.
39-வது நிமிடத்தில் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கார்னரில் இருந்து அடித்த பந்தை ஜெபர்சன் லெர்மா துள்ளியவாறு தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 44-வது நிமிடத்தில் டேனியல் முனோஷ் உதவியுடன் பந்தை பெற்ற...
இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது. இந்த கார் பந்தய திருவிழா இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எஃப் 4 ஐசி) ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கியதாகும்.
இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகிறது. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ்...
ஐபிஎல் கிரிக்கெட்டால் இங்கிலாந்தின் சராசரி வீரர்களும் பணக்காரர்கள் ஆனார்கள்: பாய்காட் கிண்டல்
admin - 0
ஐபிஎல் பணமழை டி20 ரியால்டி ரக கிரிக்கெட் ஷோவினால் சாதாரணது முதல் சராசரி இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள் பணக்காரர்கள் ஆனது தவிர வேறொரு பயனும் இங்கிலாந்துக்கு ஏற்படவில்லை என்று ஜெஃப்ரி பாய்காட் கடுமையாக கிண்டல் தொனியில் விமர்சனம் செய்துள்ளார்.
குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் ஆட்டத்தை பரிகசிக்கும் விதமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார் ஜெஃப்ரி பாய்காட்.
இது குறித்து ஆங்கில பத்திரிகையில் அவர் எழுதிய...
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிதான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் கடைசி டெஸ்ட் போட்டி. அவர் 700 விக்கெட்டுகளைக் கடந்த ஒரே வேகப்பந்து வீச்சாளர். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தான் எதிர்கொண்ட சிறந்த பேட்டர் என்று கூறியுள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஆண்டர்சன் கூறியதாவது: சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர் என்றே கூறுவேன். அவருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட ஆட்ட உத்தியை வகுக்க முடிந்ததாக...
டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிவரை முயற்சித்து நான்காம் இடம் பிடித்து ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை மிஸ் செய்தார் இந்திய கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக்.
இந்த சூழலில் இந்திய கோல்ஃப் சங்க தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ் தெரிவித்தது. “டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் விளையாட்டில் விளையாடிய அதே பாணியில் தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கிலும் அதிதி விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.
கிரிக்கெட் வீரர்களுக்கும், கோல்ஃப்...
இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மைக்கேல் லூயிஸ் 27, கவேம் ஹாட்ஜ் 24,அலிக் அத்தானஸ் 23, அல்சாரிஜோசப் 17 ரன்கள் சேர்த்தனர்.கேப்டன் பிராத்வெயிட் 6, கிர்க் மெக்கென்சி...










