“எங்களை நோக்கி எழும் கேள்விகளுக்கு ஆக.15-ல் பதிலடி கொடுப்போம்” – பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
admin - 0
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணி கடந்த ஆண்டு டிசம்பரில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த நிலையில் தற்போது இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான...
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப் சார்பில் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. ஒரு சுற்று எஞ்சியிருந்த நிலையில் பட்டத்தை அவர் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
20 வயதான பிரக்ஞானந்தா, மொத்தம் 23.5 புள்ளிகளை பெற்று சாம்பியன் ஆனார். இதில் ரேபிட் பிரிவில் 12, பிளிட்ஸ் பிரிவில் 11.5 புள்ளிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், இதில்...
இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இன்று மூன்று நாள் பயிற்சி ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் லெவன் முதலில் பேட் செய்து வருகிறது. ஷுப்மன் கில்லுக்கு விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுகிறார்.
இலங்கை-இந்திய டெஸ்ட் போட்டித் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என்பதால் இரு அணிகளுக்குமே இது...
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப் சார்பில் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், அமெரிக்காவின் வெஸ்லி சோ, வோன் அரோனியன், லீனியர் டொமிங்கியூஸ் பெரெஸ், கருனா பேபியானோ, அவண்டர் லியோங், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் ஆகிய 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் 9 சுற்றுகள் கொண்ட ரேபிட்...
விசாகப்பட்டினத்தில் நேற்று பி.வி.சிந்து ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் லோகேஷ் அடிக்கல் நாட்டினார்.
இந்திய பாட்மிண்டன் நட்சத்திரமான பி.வி.சிந்து கேட்டுக்கொண்டதற்கு இனங்க விசாகப்பட்டினத்தில் ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடங்க இடமும், அதற்கான அனுமதியையும் ஆந்திர அரசு வழங்கியிருந்தது. இந்நிலையில் பி.வி.சிந்து ஸ்போர்ட்ஸ் அகாடமியின் கட்டுமான பணிகள் நேற்று தொடங்கின.
இதற்கான நிகழ்ச்சியில் ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நாரா...
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று சிறுவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டம் ஒன்றில் பெரம்பூர் டான்போஸ்கோ அணி 25-20, 22-25, 25-14 என்ற செட் கணக்கில் ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரை இறுதியில் மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் 23-25, 25-21, 25–21 என்ற...
கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் தென் கொரியாவில் உள்ள அசன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீனாவின் யுவான் அன் சி-யை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற இந்திய வீராங்கனைகளான ரக் ஷிதா ராம்ராஜ், இஷாராணி பருவா, அன்மோல் ஹார்ப், அஷ்மிதா சாலிஹா ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்....
டிஎன்பிஎல் தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுரேஷ் குமார் 43, சஞ்ஜய் யாதவ் 37, ராஜ் குமார் 35 ரன்கள் விளாசினர். மதுரை அணி தரப்பில் ராஜலிங்கம் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
174 ரன்கள் இலக்குடன் பேட்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான மைக் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 வருட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லெவல்-4 பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஸ்மித், டி20 கிரிக்கெட் தொடர்களில் பரந்த அனுபவம் கொண்டவர். குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இம்மாத இறுதியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட்...
தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் (டிஎன்பிபிஎல்) சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் லீக்கின் இயக்குநர் யோகேஷ், தமிழ்நாடு பிக்ளிள்பால் சங்கத்தின் தலைவர் மோஹித் குமார், செயலாளர் காவ்யா சோமேஷ் மற்றும் அணிகளின் உரிமையாளர்களான நடிகர் விக்ரம் (கடலூர் அணி), நடிகைகள் வரலட்சுமி (சென்னை அணி), கீர்த்தி பாண்டியன் (நெல்லை அணி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தத் தொடரில் சென்னை தமிழ் டைட்டன்ஸ், கோயம்பத்தூர் ஸ்மாஷர்ஸ், கடலூர்...









