2027 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சொந்த மண்ணில் நடைபெறுவதால் எங்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2027-ல் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகளில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் ரபாடா கூறியதாவது:
2003-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக்...
தமிழ்நாடு ஹாக்கி லீக் போட்டியின் லீக் ஆட்டத்தில் சிறப்பு விளையாட்டு விடுதி (ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆஃப் எக்சலன்ஸ்) அணி வெற்றி பெற்றது. இப்போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிறப்பு விளையாட்டு விடுதி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜிஎஸ்டி அன்ட் சென்டிரல் எக்சைஸ் அணியை வீழ்த்தியது. விளையாட்டு விடுதி அணி சார்பில் எஸ். விஷால், எஸ். கிருஷ்ணன்...
இலங்கையுடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் காயம் அடைந்துள்ள சாய் சுதர்சனுக்குப் பதிலாக இந்திய அணியினருடன் சர்பிராஸ் கான் இணையவுள்ளார்.
இலங்கைக்கான தொடரில் விளையாடும் இந்திய அணியில் சாய் சுதர்சன் இடம்பெற்றிருந்தார். காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதால் தற்போது சர்பிராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் இலங்கை சென்று இந்திய அணியினருடன் இணைந்து கொள்வார் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடந்த 28 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் இடம் பெறவில்லை. இதனால் முன்னாள் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கித் தொடர் வரும் 15-ம் தேதி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்தியாவிலிருந்து ஒரு நடுவரோ அல்லது தொழில்நுட்ப அதிகாரியோ இடம்பெறவில்லை. 1998-ம் ஆண்டு உட்ரெக்ட் உலகக்...
ஹாக்கி திருவள்ளூர் சார்பில் ‘தமிழ் ஹாக்கி லீக் 2026’ தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (9-ம் தேதி) தொடங்குகிறது.
இந்தத் தொடரில் 12 ஆடவர் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடர் வரும் செப்டம் 12 வரை 35 நாட்கள் நடைபெறுகிறது. முதன்முறையாக 4 அணிகள் பங்கேற்கும் மகளிர் மினி லீக்கும் நடத்தப்பட உள்ளது.
ஆடவர் பிரிவில் கலந்து கொள்ளும் 12 அணிகள் 2 பிரிவுகளாக...
டிஎன்பிஎல் தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆஷிக் 56 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாசினார்.
நாராயண் ஜெகதீசன் 27, அஷ்வத் வல்தப்பா 28, வசீம் அகமது 16 ரன்கள்...
டெல்லியில் இருந்து குடிபெயர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டி நிரந்தரமாக குடியேற இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமூக வலைதளப் பதிவு மூலம் பந்த் முறையிட்டார். அது இப்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில்...
கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பது குறித்து அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.
39 வயதான மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான அர்ஜெண்டினா அணி, ஃபிபா கால்பந்து தொடரில் 2022-ல் சாம்பியன் பட்டமும், 2014 மற்றும் 2026-ல் இரண்டாம் இடமும் பிடித்தது. தன் தாயகத்துக்காக 125 கோல்களை...
வங்கதேச கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி டார்வினில் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்.
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர், இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில்...
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் சிறுமியர் பிரிவு இறுதிப் போட்டியில் புரசைவாக்கம் டெலக் மேக்டலின் 25-13, 24-26, 25-18 என்ற செட் கணக்கில் மயிலாப்பூர் லேடி சிவாமி பள்ளி அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெரம்பூர் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 25-14, 25-13 என்ற செட்...









