பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி: டான் போஸ்கோ, மேக்டலின் சாம்பியன்

0
17

சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான சிறுவர், சிறுமியர் வாலி​பால் சாம்​பியன்​ஷிப் போட்டி எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடைபெற்றது.

இதில் சிறுமியர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் புரசைவாக்கம் டெலக் மேக்​டலின் 25-13, 24-26, 25-18 என்ற செட் கணக்​கில் மயி​லாப்​பூர் லேடி சிவாமி பள்ளி அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது. 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் பெரம்​பூர் சென்னை பெண்​கள் மேல்​நிலைப்​பள்ளி அணி 25-14, 25-13 என்ற செட் கணக்​கில் கீழ்​பாக்​கம் கோல சரஸ்​வதி அணியை தோற்​கடித்​தது.

சிறு​வர்​களுக்​கான இறு​திப் போட்​டி​யில் பெரம்​பூர் டான்​போஸ்கோ மேல்​நிலைப் பள்ளி 25-15, 25-20 என்ற செட் கணக்​கில் மயி​லாப்​பூர் செயின்ட் பீட்ஸ் அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது. 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் முகப்​பேர் வேலம்​மாள் அணி 25-8, 25-16 என்ற செட் கணக்​கில் ராயபுரம் செயின்ட் பீட்​டர்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

பரிசளிப்பு விழா​வில் வரு​மான வரி ஆணை​யர் பாண்​டியன், சுங்கத் துறை உதவி ஆணை​யர் சண்​முகசுந்​தரம், ரோமா குழுமத்தைச் சேர்ந்த ஆர்​.​வி.எம்​.ஏ.​ராஜன் தமிழ்​நாடு வாலி​பால் சங்​கத்​தின் பொருளாளர் செல்​வகணேஷ், சர்​வ​தேச வாலி​பால் வீரர்​கள் நவீன் ராஜா ஜேக்​கப், அஸ்​வின் ராஜ் மற்​றும் சென்னை மாவட்ட வாலி​பால் சங்க பொருளாளர் பழனியப்​பன், செய​லா​ளர் கேசவன், துணைத்​தலை​வர் கோகலே, துணை செய​லா​ளர் பாக்​ய​ராஜ் உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here