Google search engine
புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில், டிஎன்சிஏ லெவன், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டிஎன்சிஏ லெவன் அணி முதல் 379 ரன்களும், மும்பை அணி 156 ரன்களும் எடுத்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ லெவன் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 510 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம்...
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துடெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று...
தெற்கு ஆசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர சாலை பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த போட்டி இன்றும் (31-ம் தேதி), நாளையும் (செப்டம்பர் 1) நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் இதுவாகும்....
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அவனி லெகரா தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் (எஸ்ஹெச் 1) பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா இறுதிப் போட்டியில் 249.7 புள்ளிகள் குவித்து பாராலிம்பிக்ஸ் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு...
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் ஹாக்கி லீக் தொடரின் மாநில அளவிலான போட்டி நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது. இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி - அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.மற்ற ஆட்டங்களில் ராமநாதபுரம் 4-0 என்ற கோல் கணக்கில் திருச்சி மண்டல ஒருங்கிணைந்த...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கோகோ காஃப் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 3-வது நாளில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சகநாட்டைச் சேர்ந்த லாஸ்லோ டிஜெரேவை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-4, 6-4, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தபோது காயம்...
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கைதேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. டான் லாரன்ஸ் 9, கேப்டன் ஆலி போப் 1, பென் டக்கெட் 40, ஹாரி புரூக் 33, ஜேமி ஸ்மித் 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். தேனீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 53...
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்...
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் ‘பள்ளிகள் ஹாக்கிலீக்’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டங்களை உள்ளடக்கிய இந்த தொடரின் முதல் கட்டத்தில் 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இருந்து 38 அணிகள் தேர்வு செய்யப்பட்டு 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இருந்து வெற்றி பெற்ற அணி மற்றும் 6 மண்டல அணிகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட அணி என மொத்தம் 12...
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரானகடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. டிரினிடாட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 13 ஓவர்களாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக...