தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் ஹாக்கி லீக் தொடரின் மாநில அளவிலான போட்டி நேற்று சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கியது.
இதில் மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளி – அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.மற்ற ஆட்டங்களில் ராமநாதபுரம் 4-0 என்ற கோல் கணக்கில் திருச்சி மண்டல ஒருங்கிணைந்த அணியையும், பாளையங்கோட்டை எம்.என்.அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் சென்னை செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளி அணியையும் வீழ்த்தின.