ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டி சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 400-வது ஆட்டமாக அமைந்தது.
இதன் மூலம் 400 டி 20 போட்டிகளில் விளையாடிய 4-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். இந்த வகை சாதனையில் இந்திய...
ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), ராஜஸ்தான் ராயல்ஸ்(ஆர்ஆர்) அணிகள் மோதவுள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட பெங்களூரு அணி வெற்றி பெறவில்லை. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை பெங்களூரு அணி தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்...
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததால் தோல்வி கண்டோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்தார்.
டெல்லி, லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நேற்று முன்தினம் லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு...
பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை...
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை இணைந்து 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கான 41-வது ஆண்டு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பயிற்சி முகாம் வரும் 28-ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அன்றைய தினமே தங்கள் பெயரை பதிவு...
கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் முக்கியமானது 3 துறைகள். பேட் டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலுமே சிறந்து விளங்கக் கூடிய அணிகள் தான் எப்போதும் வெற்றிக் கனியைச் சுவைக்கின்றன.
ஆனால், சில போட்டிகளில் மோசமான ஃபீல்டிங் காரணமாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களைப் பெற்றுள்ள சிறந்த அணிகள் கூட தோல்வியைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக எதிரணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்களின் கேட்ச்களை கோட்டை விடுவது அந்தப் போட்டியின் முடிவையே...
நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
33...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத்: ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை
admin - 0
ஐபிஎல் லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே...
குஜராத் டைடன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி கண்டோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது.
முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. சாய் சுதர்ஷன்...
சென்னையில் நடைபெற்ற விழாவில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.7 லட்சத்தை சென்னை சூப்பர்கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்கினார்.
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) மற்றும் சிஎஸ்கே சார்பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட்...









