PAK vs BAN | ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கம்

0
38

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கப்பட்டுள்ளார். அதேவேளையில் லெக் ஸ்பின்னரான அப்ரார் அகமது, வேகப்பந்து வீச்சாளர் மிர்ஹம்சா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமனில் முடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான் அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here