மெல்பர்ன்: இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர்...
முல்தான்: பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கவுள்ளது. முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி கண்டு 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் முல்தான் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது இங்கிலாந்து. அந்த அணியின் ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோர் முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடி...
தம்புல்லா: தம்புல்லாவில் நடைபெற்ற முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட்போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தம்புல்லாவில் உள்ள ரண்கிரி தம்புல்லா சர்வதேச மைதானத்தில் முதலாவது டி20 போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள்...
சென்னை: 31-வது ஆடவர் தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டியை புதுச்சேரி அட்யா பட்யா சங்கம் மற்றும் அட்யா பட்யா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து புதுச்சேரி ஆசிர்வதிக்கப்பட்ட மதர் தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், குஜராத், ஆந்திரா என மொத்தம் 17 மாநிலங்கள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றன. இந்தப்...
துபாய்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது.
‘குரூப் - ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 54 ரன்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதே பிரிவில் இருந்த இந்திய அணி வெளியேறி உள்ளது.
திங்கட்கிழமை (அக்.14) நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான...
இஸ்லாமாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானை, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில்...
புதுடெல்லி: ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கஜகஸ்தானின் அஸ்டானாவில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஜோடி 411, 9-11, 8-11 என்ற கணக்கில் ஜப்பானின் மிவாஹரிமோட்டோ, மியூகிஹாரா ஜோடியிடம் தோல்வி கண்டது. மகளிர் அணிப் பிரிவில் மணிகா பத்ரா, அய்ஹிகா முகர்ஜி, சுதிர்தா முகர்ஜி ஆகியோரைக் கொண்ட...
ஹைதராபாத்: வங்கதேச அணிக்கெதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டனும், பயிற்சியாளரும் கொடுத்த சுதந்திரத்தால் சாதித்தோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வங்கதேச அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
சஞ்சு சாம்சன் 47...
புதுடெல்லி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள சூர்மா ஹாக்கி கிளப் அணி சார்பாக இந்திய ஹாக்கி அணியின் கேட்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ. 78 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில் ஐபிஎல் போட்டி பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக 2017-ல் நடைபெற்ற எச்ஐஎல் போட்டியில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர்...
புதுடெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த ஃபீல்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, “இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் பயிற்சிக் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஃபீல்டிங்கில் என்னுடைய 100 சதவீத திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன்” என்றார். இந்தத் தொடரில் 3 விக்கெட்களை வாஷிங்டன்...










