Google search engine
தமிழகத்தில் பழங்குடியினர் நலனுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காதது ஏன் என்பது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மல்லிகா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நானும், எனது கணவரும் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தோம். எங்களின் சமூகத்தை உறுதி செய்வதற்காக, ரத்த வழி...
மாணவர்களுக்கான சீருடை, பொங்கலுக்கான இலவச வேட்டி,சேலை உரிய நேரத்தில் வழங்கப்படுவதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் எதிர்க் கட்சித்தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார். இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் மாணவர்களுக்கு நான்கு இணை இலவச சீருடைகள் வழங்கும் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இவற்றுக்கு பதிலளித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட...
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் தாக்கல்செய்துள்ள மனுவில், "கூகுள்தளத்தில் தவறான நபர்கள்ஆபாச இணையதளங்களுக்கான பரிந்துரைகளாக விளம்பரப்படுத்துகின்றனர். இந்த ஆபாசப்புகைப்படங்கள் கொண்ட விளம்பரங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு மன பாதிப்பைஏற்படுத்துகிறது. மேலும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் இருக்கிறது" என்று கூறியிருந்தார். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி ஆகியோர்கொண்ட முதல் அமர்வானது கூகுள் நிறுவனமும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமும் இதுகுறித்து 2...
வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய, நடுத்தர மக்கள் தான். இந்தக் கட்டண உயர்வு அனைத்தையும், பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தவிர கட்டுமான நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லை....
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமகவின் களச் செயல்பாடு களை தீவிரப்படுத்தும் வகையில், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ஒருதொகுதி செயலாளர், தொகுதிதலைவரை நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பும், நியமனங்களும் விரைவில் வெளியிடப்படும். மாவட்ட செயலாளர் மாவட்ட அளவில் கட்சியின் பிரதிநிதியாகசெயல்படுவார். உறுப்பினர் சேர்க்கை, கட்சி அமைப்புகளை வலுப்படுத்தல் பணிகளை மேற்கொள்வார். கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள், நிகழ்ச்சிகளை மாவட்ட அளவில் ஏற்பாடு...
தமிழகத்தை 3 மாநிலமாகப் பிரித்தால் ரூ.45 ஆயிரம் கோடி நிதி பெற்றுத் தருவோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று தமிழக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. நிதி...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலையில் 1,178 அடி உயரத்தில் ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ரூ.9.10 கோடியில் ரோப்கார்வசதி நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் 4 பெட்டிகளில் தலா 2 பேர் பயணம் செய்ய முடியும். இந்நிலையில் 2-வது நாளான நேற்று ரோப் கார் இயங்கியபோது காற்று வேகமாக வீசியது. இதனால், கம்பி வடத்தில் இருந்து சக்கரம் நகர்ந்ததால் ரோப்கார் பாதியிலேயே நின்றது. இதையடுத்து, ரோப் காரில்...
ஒரு லட்சம் பேரில் ஒருவரைத் தாக்கும் ‘குயில்லன் பார்ரே’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலப் பெண்ணை, மதுரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்கனி (26). இவர், தனது கணவரின் பணிநிமித்தமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இடம் பெயர்ந்தார். இந்நிலையில் 3-வது முறையாக கர்ப்பமடைந்த ராஜ்கனிக்கு, கடந்த ஜூன் 20-ம்தேதி வீட்டிலேயே ஆண் குழந்தைபிறந்தது. ஜூன்...
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கைசிபிசிஐடி சரியாக விசாரிக்கவில்லை. இதை தேசிய தேர்வு முகமை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்ததருண்மோகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆள்மாறாட்ட வழக்கை விசாரிக்க சிபிசிஐடி சார்பில் சிறப்புக் குழுஅமைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், நீதிபதி...
வணிகத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்றும், வணிகர்கள் கடைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை தாமாக முன்வந்து செய்ய வேண்டும் என்றும் வணிகர்கள் நலவாரிய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான், வணிகர்கள் நலனுக்காக வணிகர்கள் நலவாரியம் கடந்த 1989-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது வணிகர்கள் நலவாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைவராகவும், அமைச்சர் பி.மூர்த்தியை துணைத் தலைவராகவும் கொண்டு...