பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை மனு
admin - 0
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளபடி அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கனவான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தங்களது தலைமையிலான அரசுக்கு...
குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பு: பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
‘குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் போன்றவை பொதுமக்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.
அதனால்,...
உரிமையியல் வழக்குகளில் தமிழக அரசுக்காக ஆஜராகி வாதிட ஏதுவாக 17 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு தரப்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதிடும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக அடிப்படையில் 17 பேரை அரசு வழக்கறிஞர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் பரிந்துரையின்பேரில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அரசு...
ஆளும் தவெக தனிப் பெரும்பான்மையை நோக்கி அதிரடியாகக் காய்களை நகர்த்தி வருவதால், அதிமுக எம்எல்ஏ.க்கள் பலர் தவெகவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணை அக்கட்சியால் எட்ட முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்,...
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தின் மேல்புறம் காட்டுப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தக் கட்டிடம் முற்றிலுமாக இடிந்து...
காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்
admin - 0
காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை எதிர்த்து, டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தற்போது, பெரும்பாலான மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தின்படி, டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் போது, கூடுதலாக ரூ.10 கொடுக்க வேண்டும். காலி மது பாட்டிலை அதே கடையில் மீண்டும் கொடுக்கும் போது...
மேகேதாட்டு அணை விவகாரம்: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் – கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
மேகேதாட்டு அணை விவகாரத்தில் அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காவிரி என்பது ஒரு மாநிலத்தின் சொத்து அல்ல, இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி. உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடைமுறைகளையும் மீறி, ஒருதலைபட்சமாக அணைக்கட்ட முயல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது.
தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசின் இந்த...
திருவான்மியூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை 2 வாரத்துக்குள் மூடுமாறு முதல்வர் விஜய் கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழகத்திலுள்ள 4,765 டாஸ்மாக் கடைகளில் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள...
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய வீரர், வீராங்கனைக்கு ரூ.5.80 லட்சம் நிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்
admin - 0
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய வீரர், வீராங்கனைக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரூ.5.80 லட்சம் நிதி வழங்கினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து சாதனையாளர்களாக மாற்ற தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காது கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற நீச்சல்...
மெரினா கடலில் குளிக்கும் போது, அலையில் இழுத்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த அண்ணனின் உடல் கரை ஒதுங்கியது.
ஆவடி, கோவில்பதாகையைச் சேர்ந்தவர் தேவகி. இவர், கடந்த 22-ம் தேதி மகன்கள் சுதர்சன் (16), கமலேஷ் (15) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். கண்ணகி சிலை பின்புறமுள்ள கடலில் சகோதரர்கள் இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் தம்பி கமலேஷ் சிக்கி உள்ளார். இதனைக் கண்ட...










